அணையை கட்ட சொன்னால் துணையை கட்டுகிறார்கள்.. சீண்டி பேசிய சீமான்
சென்னை: காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், அணையை கட்ட சொன்னால் துணையை கட்டுகிறார்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நீரை பெற்று தர வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை. ஏதாவது பேசுகிறார்களா.. திமுக அரசு ஏதாவது பேசுகிறதா?.. ஏனென்றால் அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ்.. அவங்க தரமாட்டாங்க. ஏன் என்றால் காவிரி நீர் தான் அங்கே அரசியல். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது.

அதை வைத்து தான் அவர்கள் அங்கே அரசியல் செய்கிறார்கள். நீங்க கேட்டு பெறுவதற்கான எந்த இதுவும் இல்லை. என்ன பண்ண முடியும். நீங்கள் விவசாயி என்று நினைக்கிறீர்கள். கூட்டு குடிநீர் திட்டம் இருக்கிறதே.. சிவகங்கை ராமநாதபுரத்தில் காவிரியில் தண்ணீர் வந்தால் தான் இங்கேயும் குடிநீர் கிடைக்கும். அதனால் எல்லாருக்குமே பாதிப்பு தான். வேளாண் குடிமக்களுக்கு மட்டுமில்லை.
ஒரு தடுப்பணை கூட கிடையாது: எல்லாருக்கும் தான். காவிரியில் எங்களுக்கான உரிமை இருக்கிறதா இல்லையா. காவிரி எல்லாம் ஒரு பிரச்சினையா?.. கச்சத்தீவு எல்லாம் ஒரு பிரச்சினையா? என்று பேசினால் எப்படி?.. எனக்கு உரிமை இருக்கா இல்லையா? ஒரே நாடு என்று சொல்கிறீர்கள்.. ஒரே நாடு என்றால் அந்த நாட்டில் இருக்கும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொது தானே.. அப்படித்தானே இருக்க வேண்டும். எங்களுடைய வளங்கள் எல்லாமும் பொதுமையாத்தானே இருக்கிறது.
பெட்ரோல், அணு உலையில் தயாரிக்கப்படும் மின்சாரமாக இருக்கட்டும், பழுப்பு நிலக்கரியில் தயாரிக்கும் மின்சாரம் என எல்லாமே பொதுவாகத்தானே இருக்கிறது. அப்படி தான் எடுத்துக்கொண்டு போறீங்க.. ஆனால் உங்களுடைய நீர்வளம் என்றால் மட்டும் எப்படி?.. 133 கிலோ மிட்டர் தமிழகத்தில் காவிரி ஓடுகிறது. இதில் ஒரு தடுப்பணை கூட கிடையாது.
துணைகளை தான் கட்டுவோம்: 15 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை இருந்தால் போதும் என்கிறார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு அவர்கள் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு 36 கி.மீ தான். ஆனால் நமக்கு 133 கிலோ மீட்டர் தூரம் இருந்தும் ஒரு தடுப்பணை தான் இருக்கிறது அதுவும் முன்பு கட்டியது தான்.. முதலில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.
நீரை தேக்க வேண்டும். நீரை தேக்கி அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த வேண்டும். குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும்.. நாங்க எப்படி அணைகளை கட்டுவோம்.. பல துணைகளை தான் கட்டுவோம்.. அது காமராஜர் ஆட்சியோடு முடிந்தது. என் நாடு என் மக்கள் என்று நேசிக்கிற தலைவராக இருந்ததால் நடந்தது. இவ்வாறு சீமான் பேசினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications