உயிர்பலியை தடுக்க சட்டம் கொண்டு வந்தால் தடுக்கிறார்கள்.. முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் ஸ்டாலின்
சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தவிர்க்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை : வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சென்னையில், கடந்த 8 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 'அகில இந்திய மாநாடு' நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், அரசியல் பிரமுகர்கள், தோழமை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முஸ்லீம் லீக் மாநாட்டில் ஸ்டாலின்
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், "சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வரக் காரணமாக உள்ளது. திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல. பேரறிஞர் அண்ணாவையும், கருணாநிதியையும் இணைக்கப் பாலமாக இருந்தது இஸ்லாம்" என்று கூறினார்.

திமுக - இஸ்லாமியர் நட்புறவை பிரிக்க முடியாது
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கருணாநிதி. அதை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார் கருணாநிதி. இஸ்லாமியர்கள் வேறு, தாம் வேறு என்று கருணாநிதி நினைத்தது இல்லை. திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது.

கிடப்பில் போடும் ஆளுநர்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சாதாரண சட்டடத்திற்குக் கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 4 மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஆளுநர். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டத்தை அனுப்பினால், அதை கிடப்பில் வைத்துவிட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. இதுதான் ஆளுநர் செயல்படும் விதமா?

தடுக்கிறார்கள்
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள் உடனடியாக நிறைவேறிவிடும். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்ப்பார்கள். இந்தியை திணிப்பார்கள். மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தவிர்க்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள்.

ஓரணியில் திரள்வோம்
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேர்தலாக 2024ல் நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அமையப்போகிறது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளீர்கள். விரைவில் அவர்கள் விடுதலை தொடர்பான மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்." என்று பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications