திலகவதிக்கு தந்த அரசு வீட்டை வேற யாருக்கும் ஒதுக்கக்கூடாது: வீட்டுவசதி வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது என்று கோரி ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி திலகவதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீது, முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் முன்னாள் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என வீட்டு வசதி வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறந்தநாள்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு ஞானபீடம், சாகித்ய அகாடமி, தேசிய, மாநில மற்றும் சர்வதேச அளவில் இலக்கிய விருதுகள் பெற்றவர்களுக்கு, 'கனவு இல்லம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, "கல்மரம்" என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு கடந்த 2022-ம் ஆண்டு, இந்த திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டது.. ஆனால், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீட்டை தமிழக அரசு 2024-ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது.
ஹைகோர்ட்டில் மனு: இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கக்கூடாது என்று கோரியும் திலகவதி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சொந்தமாக வீடு இருந்தாலும், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெற, எழுத்தாளர்களுக்கு தகுதி உண்டு என, 2022 அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.. அதை மாற்றி, வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கனவு இல்லம்: வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பத்திரப்பதிவுக்காக காத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.. ஏற்கெனவே வீடு சொந்தமாக வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தன்னுடைய மனுவில் திலகவதி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது... அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி, "அரசாணைகளில் முரண்பாடு உள்ளது. தமிழ் ஆர்வலர்களை கவுரவிக்கும் வகையில் அரசால் வழங்கப்படும் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது" என்று வாதிட்டார்.
வீட்டு வசதி வாரியம்: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பிப்ரவரி 11ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டார். அதுவரை, ஏற்கனவே திலகவதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications