எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான்.. சென்னை வாகன ஓட்டிகளே தப்பி தவறிகூட இந்த தப்பு செய்யாதீங்க
சென்னை: நெடுஞ்சாலையில் ஓரத்தில் இருந்து சாலைக்கு ஏற வேண்டும் என்றால் முதலில் சாலையை கவனித்து வாகனங்கள் வரவில்லை என்று தெரிந்தால் மட்டுமே ஏற வேண்டும். இப்படி எதையும் பார்க்காமல் நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு உடனே ஏறிவிட்டு அப்புறம் என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசிக்க கூடாது என்று நெட்டிசன் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எதையும் கவனிக்காமல் கார் ஓட்டுநர் ஏறி செல்கிறார்.
சென்னையில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சரியான முறையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாவிட்டால், விபத்தில் சிக்காமல் வீடு போய் சேர முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.. சைடு கண்ணாடி பார்க்காமலோ, இண்டிகேட்டர் போடாமலோ வளைத்து சென்றால், சில நேரங்களில் பெரும் விபத்தில் சிக்கும் நிலை வரும்.

சென்னையில் கிண்டி கத்திபாரா தொடங்கி தாம்பரம் செங்கல்பட்டு கடந்து செல்லும் ஜிஎஸ்டி சாலையும் சரி, ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள ஓஎம்ஆர் சாலையும் சரி, சென்னையின் இதயப்பகுதியான அண்ணா சாலையும் சரி போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற சாலைகள். இதுதவிர வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை, துரைப்பாக்கம்-பல்லாவரம் சாலை, போரூர் சாலை, கோடம்பாக்கம் சாலை, பூந்தமல்லி சாலை ஆகியவற்றிலும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் எந்த சாலையில் வாகனம் ஓட்டினாலும், வாகன ஓட்டிகள் பின்னால் அசுர வேகத்தில் வரும் வாகனங்களை கவனிக்காமல் திடீரென சாலையில் திருப்பி சாலையை கடக்க முயன்றாலோ அல்லது திடீரென நின்று கொண்டிருக்கும் வாகனங்களை ஸ்டார்ட் செய்து நகர்த்தி சாலையில் ஏறி செல்ல முயன்றாலோ கண்டிப்பாக விபத்து அபாயம் அதிகமாக ஏற்படும்.
நெடுஞ்சாலையில் ஓரத்தில் இருந்து சாலைக்கு ஏறனும் என்றால் முதலில் சாலையை கவனித்து வாகனங்கள் வரவில்லை என்று தெரிந்தால் மட்டுமே ஏறவேண்டும்.
— Dhans (@dhans4all) August 19, 2024
இப்படி எதையும் பார்க்காமல் நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு உடனே எறிவிட்டு அப்புறம் என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசிக்க கூடாது.
Merging on the… pic.twitter.com/QDQ9tGn32s
சென்னையில் இது எந்த சாலை என்பது தெரியவில்லை.. ஆனால் காரில் இருந்த நபர் திடீரென வாகனத்தை ஸ்டார்ட் செய்து, பின்னால் வரும் வாகனத்தை கொஞ்சம் கூட கவனிக்காமல் ஏறி சென்றார். நல்ல வேளையாக பின்னால் வந்த வாகன ஓட்டி கவனித்து பிரேக் போட்டார். இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தான்ஸ் என்பவர் வெளியிட்ட பதிவில், நெடுஞ்சாலையில் ஓரத்தில் இருந்து சாலைக்கு ஏற வேண்டும் என்றால் முதலில் சாலையை கவனித்து வாகனங்கள் வரவில்லை என்று தெரிந்தால் மட்டுமே ஏற வேண்டும். இப்படி எதையும் பார்க்காமல் நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு உடனே ஏறிவிட்டு அப்புறம் என்ன செய்யலாம் என்றெல்லாம் யோசிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications