10 வருஷமா நடக்காத விஷயம்.. ஒரே நாளில் பாஜகவை தண்ணி குடிக்க வச்சிட்டாங்களே.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: நேற்று ஒரே நாளில் நடந்த சம்பவம் ஒன்று பாஜகவை கிட்டத்தட்ட தேசிய அளவில் அதிர வைத்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்திய அரசியலில் நடக்காத விஷயங்கள் நேற்று ஒரே நாளில் நடந்தது.
இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 10 வருடமாக அதிகாரபூர்வ எதிர்க்கட்சிகள் இல்லை. அதோடு எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியோடு பாஜக தனது கோட்டையாக வைத்துக்கொண்டு செயல்பட்டது.

இதனால் எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்தையும் பெரிதாக நாடாளுமன்றத்தில் எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த முறை எதிர்கட்சிகள் 230+ இடங்களை வைத்துள்ளன. பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை. அப்படி இருக்க கடந்த 10 வருடங்களில் இந்திய அரசியலில் நடக்காத விஷயங்கள் நேற்று ஒரே நாளில் நடந்தது.
கூட்டத்தொடர்: இந்த கூட்டத்தொடர் முழுக்கவே நீட் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் பாஜகவை எதிர்க்கட்சிகள் திணறடித்து உள்ளன. அதெல்லாம் போக நேற்று ராகுல் காந்தி தொடங்கி ஆ ராசா வரை பலரின் பேச்சுக்கள் பாஜகவை ஆட்டம் காண வைத்தது.
நேற்று கூட்டத்தொடரில் பேசிய ஆ. ராசா, மோடியை கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான் அவரை அப்படி நம்ப முடியவில்லை. முகலாயர்கள் வந்தேறின்னா ஆரியர்கள் நீங்களும் வந்தேறிகள் தான். இந்த நாட்டின் பூர்வ குடிகள் திராவிடர்கள் தான். ஆரிய வந்தேறிகள் தான் நாட்டை விட்டு ஓடனும் அன்பு, சகோதரத்துவம், மனிதாபிமானம் தான் கடவுள் என்றால், நாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் இல்லை.
நாங்கள் மோடியைக் கூட கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம், அதற்குறிய தகுதி அவருக்கு இருந்தால். ஆனால் அவருக்கு அந்த தகுதி இல்லை. நீங்கள் தமிழ்நாட்டை மதிக்கவில்லை. நீட் விலக்கு தொடர்பாக 8 கோடி மக்களின் குரல்களை நீங்கள் நிராகரித்தீர்கள். எங்களை குப்பைத் தொட்டிபோல் நடத்தினீர்கள். அதனால்தான் இப்போது நாங்கள் 40/40 என வென்று உங்களுக்கு பாடம் புகட்டி உள்ளோம். .
அசத்தல் பேச்சு: 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜகவுக்கு எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை. இந்தியாவில் பொருளாதாரம், கல்வி மிகவும் பின்தங்கியிருந்ததால் எனது முன்னோர்கள் ஸ்ரீலங்காவிற்கு சென்று பிழைப்பு நடத்தினார்கள். இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்; எனது மகளோ லண்டனில் ஒரு பிரபல பல்கலை.யில் படிக்கிறாள்; இதற்கெல்லாம், பெரியார், அம்பேத்கர் மற்றும் திராவிட கொள்கைகள் தான் காரணம், என்று கூறினார்.
ராகுல் காந்தி: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது .
சமூக வலைத்தளங்களில் ராகுல் பேசிய காணொளிகளைப் பகிர்ந்து பலரும் விவாதம் செய்து வருகின்றனர். நீட் விவகாரம், சபாநாயகரின் ஒருதலைபட்சம், சான்சத் தொலைக்காட்சியின் செயல்பாடுகள், மோடியின் செயல்பாடுகள் என்று பல விஷயங்களை ராகுல் காந்தி இன்று விவரமாக பேசினார்.
அவருக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத் சிங் என்று பலர் மீண்டும் மீண்டும் பேசியும் கூட ராகுல் காந்தி அவையில் விடாமல் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.
ராகுல் பேச்சு: ராகுல் காந்தி தனது பேச்சில், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்
எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.
அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அதற்கான உரிய இழப்பீட்டை வழங்கவில்லை. நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து சமூகம் கிடையாது.
சபாநாயகராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு நானும் கை கொடுத்தேன் பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நீங்கள் நிமிர்ந்து நின்று கை கொடுத்தீர்கள். பிரதமர் மோடி கை கொடுத்தபோது உடனே குனிந்து அவருக்கு கை கொடுக்கிறீர்கள் என்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் சம்பவம்: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது/. மொத்த பாஜகவையும் அதிர வைக்கும் அளவிற்கு , மோடி எழுந்து நின்று இரண்டு முறை குறுக்கிடும் அளவிற்கு ராகுல் காந்தியின் பேச்சுக்கள் மிக சிறப்பாக இருந்தன.
இன்னும் பலர்: இதோடு இல்லாமல் திரிணமூல் காங்கிரசின் மொய்த்ரா தொடங்கி இன்னும் பலர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசியது பாஜகவை ஸ்டன் ஆக செய்துள்ளது. நேற்று முழுக்க நாடாளுமன்றத்தில் பாநாயகர் பிர்லாவும் எதுவும் செய்ய முடியாமல்.. மைக்கை அணைத்தாலும் சாதாரணமாகவே எதிர்க்கட்சியினர் குரலெடுத்து பேசியதால் வேறு வழி இல்லாமல் ஓம் பிர்லா இந்த பேச்சை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
10 வருடங்களில் நடக்காத காட்சிகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் திடீரென அரங்கேற தொடங்கி உள்ளன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications