என்ன நடக்கும்னு நீங்களே யோசிச்சுக்கோங்க! என்னங்க இது.. தமிழ்நாடு வெதர்மேன் இப்படி வார்னிங் தருகிறாரே
சென்னை: சென்னை வானிலை குறித்த முக்கியமான எச்சரிக்கை ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு உள்ளார்.
கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
மீனம்பாக்கம்: இந்த நிலையில் சென்னை வானிலை குறித்த முக்கியமான எச்சரிக்கை ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு உள்ளார். சென்னையில் நேற்று மீனம்பாக்கத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை வரை வெப்பம் உயர்ந்த நிலையில் வெதர்மேன் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதில், நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை 41 டிகிரி செல்ஸியஸ் வரை நெருங்கி வருகிறது. அப்படி என்றால் மீனம்பாக்கத்தில் எவ்வளவு வெப்பநிலை நிலவும் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள் இன்று. சென்னையின் நகர பகுதிகள் 42 டிகிரி செல்ஸியஸ் வரை செல்ல வாய்ப்புகள் உள்ளன.
இந்த வருடத்தில் இன்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாகும். மே 23ம் தேதி நாம் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார். இன்று காலை அவர் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் நேற்றை விட இன்று வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், நேற்று மீனம்பாக்கம் மாநிலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 42 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது. உண்மையான கத்ரி வெயில் இதுதான்.
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களுக்கு செம்ம ஹாட் டே, என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வெப்பம் - வானிலை: தமிழ்நாட்டில் கோடை காலம் நிறைவு பெற்று மழைக்காலம் தொடங்க வேண்டியதற்கான காலம் நெருங்கிவிட்டாலும் இன்னும் வெயில் குறையவில்லை. முக்கியமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டால் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.
வெயில் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications