"டேஞ்சரஸ்" திருமாவளவன்.. ஆக்ரோஷ வார்த்தைகள்.. பின்னாடியே வந்த பாமக பாலு.. கோட்டைக்கு பறந்த கோரிக்கை
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் மீது, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பாமக விடுத்துள்ளது.. என்ன காரணம்?
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் வரக்கூடாது என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் நிலவியது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அடுத்த உத்தரவு வரும் வரை கோயிலை பூட்டுமாறு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார்.
மேல்பாதி: அப்போது, "மேல்பாதி கிராமத்தில் ஒருவன் சென்று பேசியிருக்கிறான்.. சட்டம் படித்தவன் மக்களிடையே வன்மத்தை விதைத்து பேசுகிறான், சுப்ரீம்கோர்ட் சென்றாலும் விடமாட்டோம் என்று வன்மமாக பேசுகிறான்.. இதுதான் அவனது சாதி புத்தி. இப்போது கோவிலை இழுத்து பூட்டி விட்டார்களே இப்பொழுது எங்கே செல்வாய் நீ?

தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து வருகின்ற அரிசியை உண்ணாமல் இருக்கிறானா? தாழ்த்தப்பட்டவன் துவைக்கின்ற துணியை நீ உடுத்தாமல் இருக்கிறாயா? ஒடுக்கப்பட்டவன் கால் படாமல் மிதிபடாமல் எந்த சாமியும் உருவானது இல்லை. அதிகாரத்தை நோக்கி உரிமையை கேட்கும் இடத்தில் தான் அவன் சாதி பார்க்கிறான்
மேல்பாதியில் சம்பவத்திற்கு சம்பந்தமில்லாமல் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவன் தாக்கப்படுகிறான் அவன் மீதே வழக்கு பதிவு செய்து கைதும் செய்யவும் படுகிறான், இதுதான் சாதியவாத போலீஸ் புத்தி.
தீண்டாமை: சாதி தீண்டாமையை எதிர்ப்பவர்கள் ஆளும் தமிழ்நாட்டிலேயே காவல்துறையினர் இப்படி செயல்படுகிறார்கள் என்றால் சாதி தீண்டாமை புத்தியைக் கொண்ட பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று எண்ணி பாருங்கள். இந்துக்கள் என்ற போர்வையை சாதி அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது. வன்னியர்களுக்கு யார் எதிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியா? பாரதிய ஜனதா கட்சியா? என்றெல்லாம் திருமாவளவன் காட்டமாக பேசியிருந்தார்.
இதற்கு பாமக கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.. இது குறித்து பாமக வழக்கறிஞர் பாலு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, அவர் சொன்னதாவது: "ஒட்டுமொத்தமாக, வன்னியர் சமுதாய மக்களுடைய சாதி புத்தி என்று கோயில் விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு திருமாவளவன் சொல்லியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சாதாரணமானவன்: நான் ஒரு சாதாரணமானவன்.. என்னை பற்றி அவர் விமர்சனம் செய்தார்.. நீங்க வக்கீலா? படிச்சீங்களா? சுப்ரீம்கோர்ட் போனீங்களா? இப்படியெல்லாம் சொன்னால் எனக்கு கவலையில்லை.. ஆனால், ஒரு சமூகத்தையே காரணம் காட்டி, அந்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் செய்கிறார் என்றால், நிச்சயமாக அவர் அந்த சட்டத்துக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்..
அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார் திருமாவளவன்... திருமாவளவனை அடையாளப்படுத்தியதே பாமக தான்.. தேர்தலை மனதில் வைத்தே மேல்பாதி விவகாரத்தை திருமாவளவன் பேசி வருகிறார்.. மோடி சமூகத்தைப் பற்றி பேசியதால்தான், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்..
டேஞ்சர்: பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழிக்கு புறம்பாக செயல்படும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விசிகவை தடை செய்ய வேண்டும், அக்கட்சியின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் ஏற்கனவே சிவசேனா புகார் தெரிவித்திருந்தது..
அதுமட்டுமல்ல, அன்று கோவை பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் உள்ளனர் என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியதற்கு, பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருமாவளவன், சீமான், இவங்களெல்லாம் எந்த ஜென்மங்கள் என தெரியவில்லை.. ஆனால் அவர்கள் தேச விரோதிகள். இந்த நாட்டின் தீய சக்தி.. விசிகவை தடை செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியிருந்தார்.. இப்போது, பாமகவும், திருமாவளவன் மீது நடவடிக்கை கோரி தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications