திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்!
சென்னை: இந்தியாவின் இடைத்தேர்தல் வரலாற்றில் புதிய ஃபார்முலாவையே உருவாக்கிய பெருமை மதுரை மாவட்டம் திருமங்கலத்தையே சாரும். அந்த அளவிற்கு 2009 இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவனிப்பதில் திருமங்கலம் ஃபார்முலா தனி வரலாறே படைத்திருந்தது. அது இந்த தேர்தலிலும் தொடரும் என்பதால் திருமங்கலம் வாக்காளர்கள் செம குஷியில் இருக்கிறார்களாம்.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு சிறுசிறு பரிசுப் பொருள்களை அரசியல் கட்சிகள் வழங்குவது சகஜம். ஆனால் பெரிய அளவில் பரிசுப் பொருள்கள் வழங்குவது, பணம் வழங்குவது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. அதுவும், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என தொகுதி பார்த்து அமவுண்ட் ஃபிக்ஸ் செய்வது எல்லா கட்சிகளிலுமே இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வாக்காளர்களும் பணத்தை எதிர்பார்ப்பதும் சகஜமாகிவிட்டது.

ஓட்டுக்கு இவ்வளவு என்றும், பரிசுப்பொருள் கொடுப்பதையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது என்றால் அது 2009 திருமங்கலம் இடைத்தேர்தல் தான். 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது சிப்காட் தொழில் வளாகம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருந்தார்கள். எனவே, 2009 இடைத்தேர்தலில் தாங்கள் தோற்கக்கூடாது என்பதற்காக, திருமங்கலம் இடைத்தேர்தல் பொறுப்பு கலைஞரின் மகன் மு.க. அழகிரி வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய், பல்வேறு பரிசுப்பொருள்கள், வெளியூரில் இருந்து ஓட்டுப்போட வருபவர்களுக்கு அதற்கான செலவு தொகை, வாக்குப்பதிவு அன்று பிரியாணி விருந்து என திருமங்கலம் தொகுதியையே அதிர வைத்தார் அழகிரி. இந்த கவனிப்பால் திமுக வேட்பாளர் லதா அதியமான் சுமார் 39 ஆயி்ரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அப்போதிலிருந்து தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை போட்டி போட்டு கவனிப்பது என்பது அரசியல் கட்சிகளிடையே வழக்காகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
2026 - திருமங்கலத்தில் என்ன ஸ்பெஷல்?
கடந்த 2009 இடைத் தேர்தலுக்குப் பிறகு திருமங்கலம் தொகுதியில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று முறையும் அதிமுகதான் வெற்றி பெற்றது. அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
மூன்றாவது முறையாக அவரே இந்த முறையும் திருமங்கலத்தில் போட்டியிடுகிறார். இதற்கான பணியை ஓராண்டுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டாராம் உதயகுமார். தேர்தல் பணிக்காக டி.குன்னத்தூரில் தான் கட்டியிருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே தங்கிவிட்டாராம் உதயகுமார். பூத் வாரியாக ஆட்களை நியமித்து களப்பணியில் தீவிரம் காட்டி வருகிறாராம் உதயகுமார்.
மீண்டும் களமிறங்கிய திமுக
திருமங்கலம் தொகுதியில் தொடர் தோல்வி என்னும் நிலைமையை மாற்ற வேண்டும் என நினைக்கிறதாம் திமுக தலைமை. அதற்காக இந்த முறை திருமங்கலம் தொகுதி ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளதாம். மேலும், வரும் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட உள்ளாராம்.
மணிமாறனை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என கங்கணம் கட்டி சபரீசன் தொகுதி பணிகளில் நேரடி கவனம் செலுத்த உள்ளாராம். அதனால் வாக்காளர் கவனிப்பு விசயத்தில் வெகு தாராளம் காட்ட திமுக தரப்பு தயாராக உள்ளதாம். ஆர்.பி. உதயகுமாரும் சளைக்காமல் திமுகவிற்கு டஃப் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். திமுகவினர் என்ன செய்தாலும், அதற்கு ஒரு படி மேலாகவே கவனிப்பு விஷயத்தை நாமும் செய்வோம் எனக் கூறி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறாராம் உதயகுமார்.
இதனால், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி பொதுத் தேர்தல், மற்றொரு இடைத் தேர்தல் போல் களைகட்டத் தொடங்கி உள்ளது. இரண்டு கட்சிகளும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதற்குள் இந்த அக்கப்போர் என்றால் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ? எது எப்படியோ?....திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் காட்டில் அடைமழைதான்.
- சிறப்பு நிருபர்
-
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்! -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங் -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை












Click it and Unblock the Notifications