துணை முதல்வர் பதவி.. திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா.. விசிக வைத்த பவர் டிமாண்ட்!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிக தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா ரகசியமாக சந்தித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது திருமாவளவன் தரப்பில், துணை முதல்வர் பதவி டிமாண்ட் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே விசிக முடிவை அறிவிக்க தாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்கு ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரினர்.

அதன் வீடியோக்கள் வெளியாகியது. ஆனால் விசிகவை தவெகவின் எந்த நிர்வாகியும் சந்தித்ததாக புகைப்படம் கூட வெளியில் வரவில்லை. ஆனால் நேற்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது, விஜய்யின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு விசிக முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது விசிக தரப்பில் சில முக்கிய டிமாண்ட் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆட்சியில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அல்லது விசிக பிரதிநிதி ஒருவருக்கு 'துணை முதல்வர்' பதவி வழங்கப்பட வேண்டும் என்று டிமாண்ட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் அங்கமாக இருக்கும் விசிக, தவெக-வின் அழைப்பை ஏற்றுத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், விசிக-வும் இணைந்தால் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிடும்.
இது தொடர்பாக விசிக-வின் உயர்மட்டக் குழு விரைவில் கூடி இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை விஜய் ஏற்பாரா? அல்லது தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் தவெக ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை முதல் மாநாட்டிலேயே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்!











Click it and Unblock the Notifications