ஆர்எஸ்எஸ் சதி இது.. வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை விசாரிக்க வேண்டும்! - திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கியதாக சொல்லப்பட்ட நிலையில் தன்னுடைய வாகனத்தை அடையாளம் கண்டு வேண்டுமென்றே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் வம்பு இழுத்திருக்கிறார் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி' என்பது தெரியவருகிறது.

Thirumavalavan BJP VCK

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்" என வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியிருந்தனர். இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். போராட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, திருமாவளவன் சென்ற கார் சென்னை ஐகோர்ட் அருகே, வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பைக்கில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவனின் கார் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக திருமாவளவன் ஆதரவாளர்கள் அந்த வழக்கறிஞர் இடையே சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பேசி இருந்த திருமாவளவன், வேண்டுமென்றே தனது காரின் முன்பு அவரது பைக்கை நிறுத்தி விட்டு வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும், கைகளை ஓங்கியவாறு வந்தார் என்றும், இந்த சம்பவத்துக்கு பிறகு தனது ஆதரவாளர்கள் அவரிடம் பேசி அனுப்பி வைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். விசாரணையில் பைக்கில் வந்தவர் சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. சம்பவம் நடந்த பொழுது, விஷயம் தீவிரமாவதை உணர்ந்த போலீசார் ராஜீவ்காந்தியை உடனடியாக பார் கவுன்சில் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சோசியல் மீடியாக்களில் வெளியாகியிருந்தது. அதில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, மெதுவாக சென்று ஓரிடத்தில் தனது பைக்கை நிறுத்துகிறார். பைக் மீது கார் மோதாமல் இருக்க திருமாவளவன் சென்ற கார், சற்று தள்ளி நிற்கிறது. பின்னர் ராஜீவ் காந்தி பைக்கில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ ஸ்பெஷல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+