டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பிரைன் வாஷ் செய்தார்.. ஜான் ஆரோக்கியசாமியை சந்தித்தேன்.. திருமாவளவன் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே தவெக தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை சந்தித்தேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பதவி ஆசைக்காக திமுகவில் இருந்து தவெக கூட்டணிக்கு மாறவில்லை என்று கூறிய திருமாவளவன், தேர்தலுக்கு முன் டெல்லியில் வந்து 2 மணி நேரம் ஆதவ் அர்ஜுனா தன்னிடம் பேசியதாகவும் கூறியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தவெக கூட்டணி கட்சிகளின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், அரசியலில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. அரசியலை தீர்மானிக்கும் கூட்டணி அமைந்துள்ளது. மகத்தான கோட்பாடுகளை முன்னிறுத்தி இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. விசிக இடம்பெற்றுள்ள கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

Thirumavalavan

விசிகவின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர், காமராசர் தான். தவெகவின் கொள்கை தலைவர்களும் அவர்கள் தான். அதேபோல் திமுக கூட்டணி உடையாது என்று கூறி தவெக கூட்டணியில் இணைந்ததற்கு வரலாற்று நியாயங்கள் உள்ளன. பதவி, ஆசை, அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை. மக்கள் விஜய்யை தேர்வு செய்துவிட்டனர். தனி நபரை முன் வைத்து, பதவியை முன் வைத்து எப்போதும் முடிவு செய்தது இல்லை.

2 பெண் தலைவர்களை கொள்கை ஆசான்களாக கொண்டுள்ள தவெக கைகோப்பதில் கொள்கை வேறுபாடு இல்லை. 2011 மற்றும் 2014 தேர்தலில் திமுக உடன் இருந்தேன். 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு நாங்கள் காரணம் அல்ல. திமுக அன்று 180 முதல் 200 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளது. நீங்கள் இந்த கூட்டணியில் தொடர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

அதன் காரணமாகவே வெளியேறினோம். அதேபோல் தவெக அமைச்சரவையில் 10 நாட்களுக்கு பின்னர் தான் விசிக இணைந்தது. விசிகவில் பயணிக்க வேண்டும் என்று விரும்பி ஆதவ் அர்ஜுனா வந்தார். கொள்கையை பேசுங்கள்.. ஆனால் அதிகாரத்திற்கு வர முயற்சி செய்யுங்கள் என்று ஆதவ் அர்ஜுனா என்னை அசைத்து பார்த்தார். ஆனால் நான் கொஞ்சமும் அசையவில்லை. அதிகாரம் வரும் போகும்.. ஆனால் பதவிக்காக ஒரு அணியை உடைத்தான் திருமாவளவன் என்ற பெயர் வாழ்க்கையில் வரக்கூடாது.

டெல்லிக்கு வந்து 2 மணி நேரம் என்னை பிரைன் வாஷ் செய்தார் ஆதவ் அர்ஜுனா. அதிகார ஆசை, துணை முதல்வர் என்றெல்லாம் ஆசை காட்டி, பலருக்கும் தொடர்பு கொண்டு பேச வைத்தார். ஆனால் சாரி என்று சொல்லிவிட்டேன். அதன்பின் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை அவரின் வீட்டில் ஒரு புத்தக வெளியீட்டுக்காக சந்தித்தேன்.

ஸ்டாலின், ராகுல் காந்தியை வைத்து புத்தக வெளியீடு செய்ய நினைத்தார். ஆனால் திடீரென ஒருநாள் ஜான் ஆரோக்கியசாமியை அறிமுகம் செய்தார். அதன்பின் விஜய் வெளியிட, நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது கூட்டணிக்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. ஆனால் நான் ஏற்கவில்லை. அந்த புத்தக வெளியீட்டில் திமுக, அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனாவிடம் கூறினேன்.

ஆனால் விசிக அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா பேசினார். மாற்றி சிந்திக்க வேண்டும் என்றே என்னை கட்டாயப்படுத்தினார். இதனால் வேறு வழியின்றி 6 மாதம் இடைநீக்கம் செய்தேன். அதன்பின் வேறு ஒரு முடிவு எடுத்துள்ளேன் என்று கூறி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றார். நான் வாழ்த்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+