எம்.பி.சி மக்களை பாமக கைவிட்டாலும் நாங்க விடமாட்டோம்.. 0+1 = 1 தான்.. திருமாவளவன் பளிச்!
சென்னை: பாஜக, பாமக, மதவாத, சாதியவாத சிந்தனை கொண்ட கட்சிகள் என்றும், அவை ஒன்று சேர்வதால் வாக்கு எண்ணிக்கை உயரப் போவதில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டு ஆளும் திமுக முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
விசிக வேட்பாளர்கள்: இதையடுத்து விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை இன்று விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதன்படி, விழுப்புரம் தொகுதியில் மீண்டும் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் ஆறாவது முறையாக திருமாவளவன் போட்டியிடுகிறார்.
விசிக வேட்பாளர்கள் இந்த முறை இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்திலும், ரவிக்குமார் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை இரண்டு பேரும் பானை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
திருமாவளவன் பேட்டி: விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் தானும் போட்டியிடுகிறோம் என அறிவித்த திருமாவளவன், ஆறாவது முறையாக தான் சிதம்பரத்தில் நிற்பதாகவும் இதுவரை இரண்டு முறை நான் வெற்றி பெற்று இருக்கிறேன். இந்த முறையும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய திருமாவளவன், "பாஜக ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிறு குறு தொழில் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
யுத்தம்: இந்த தேர்தல் காங்கிரஸ் பாஜகவிற்கும் அல்ல, இந்தியா கூட்டணிக்கும் பாஜகவிற்கும் இடையில் அல்ல, மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையேயான யுத்தம் தான் இந்த தேர்தல். எனவே நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர். அந்த வகையில் தேர்தல் முடிவு அமையும். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் மத்தியில் அமைதி புரட்சி எழுந்துள்ளது.
மதவாத, சாதியவாத கட்சிகள்: தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவும், அதிமுகவும் தேர்தலில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளலாம். ஆனால் சமூக நீதி என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் தான். பாஜகவும், பாமகவும் ஒரே சிந்தனை உள்ள கட்சிகள். சாதிய மதவாத உணர்வில் பாஜகவும், பாமகவும் திளைத்துக் கிடக்கிறார்கள். ஓபிசி, எம்பிசி மக்களை பாமக கைவிட்டாலும் விசிக அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
0 + 1 = 1 தான்: மேலும், "பாஜக பாமக கூட்டணியால் வாக்கு வங்கி பலன் கிடைக்காது. 0 + 1 என்றால் மதிப்பு ஒன்று தான். பாமக ஒன்று, பாஜக பூஜ்ஜியம் இரண்டும் சேர்ந்தாலும் மதிப்பு ஒன்று மட்டுமே. இந்தக் கூட்டணிக்கு வாக்கு அதிகரிக்கப் போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி











Click it and Unblock the Notifications