அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்புகள்! திருமாவளவன் முன்னெடுக்கும் நல்ல காரியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமா பயிலகம் மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளை கட்டணமின்றி நடத்தி வருவதாகவும் இதனை அரசு பணிக்கு தயாராகி வருவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். .

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளான் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

Thirumavalavan conducts training classes for government employment free of charge through Thiruma Payilagam

''சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr(IV)&VAO
தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:

சென்னை:
9042991182

அங்கனூர்:
9843660449

ஜெயங்கொண்டம்:
9865756216

சிதம்பரம்
9894447722

திருப்போரூர்
74491 97728

கடலூர்
9600244839

கும்பகோணம்
7904832410

திருவாரூர்:
8825995117

திருச்செந்தூர்:
8675590803

கள்ளக்குறிச்சி:
9003612449

நாகப்பட்டினம்
9787825382

நெடுங்குளம்
7639091631

புதுகோட்டை
9443903727

குறிஞ்சிப்பாடி
9042991182

மதுராந்தகம்
9566227765

திண்டிவனம்
9043751262

வடலூர்
9942389886

திருச்சி
8508082300

தஞ்சாவூர்
9600792241

மின்னஞ்சல் : [email protected] ''

மனிதநேய மையம் அறக்கட்டளை மூலம் சைதை துரைசாமி அரசுப் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் தனது திருமா பயிலகம் மூலம் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற வேண்டும் எனக் கருதுகிறார் திருமாவளவன். இதற்காகத் தான் மாவட்ட வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.

கல்வி மட்டுமே யாராலும் திருடமுடியாக, சுரண்ட முடியாத சொத்து என்பதால் அந்தக் கல்வியை கட்டணமின்றி வழங்கி சமுதாயத்தில் பின் தங்கியுள்ள பலரையும் அரசுப் பணிகளில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இந்த முயற்சியை கடந்த ஓரிரு ஆண்டுகளாக செய்து வருகிறார். ஆண்டுக்கு ஆண்டு திருமா பயிலகம் மூலம் அரசு தேர்வுக்கு தயாராவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+