திருமாவளவன் ஜென்டில்மேன்.. சட்டென டோனை மாற்றிய பிரேமலதா.. கூட்டணிக்குள் டிவிஸ்ட்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு பலமாக இருந்த திமுக கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், மதிமுக, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்தன. இதனால் அந்த கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் ஏற்பட்ட மாற்றம் குறித்து திருமாவளவன் வைத்த விமர்சனம் பரபரப்பானது. பிரேமலதா, திருமாவளவன் பரஸ்பரம் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பிரேமலதா சட்டென டோனை மாற்றி பேசியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஒவ்வொருவர் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்லி கொண்டிருக்க முடியாது. வேட்புமனு பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்தால், அதை தேர்தல் ஆணையம் தான் சரி செய்ய வேண்டும். அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் ஜென்டில்மேன்
விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் மீது கேப்டனும், நானும் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாம். அவர் ஒரு திருமணம் கூட செய்யாமல் பொது வாழ்க்கையில் உள்ளார். என்னை பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். எதோ ஒரு சூழ்நிலையில் அவர் அப்படி சொல்லியிருப்பார். அதையே ஏன் தொடர்ந்து பேச வேண்டும். வன்னியரசுவை நான் தினமும் சட்டமன்றத்தில் பார்க்கிறேன்.
மக்களுக்கு நல்லது
எல்லாரும் சகோதரர்கள் தான். அப்படி எதுவும் கிடையாது. அவர்கள் ஏதோ சொன்னார்கள். அதற்கு நேற்றே பதில் சொல்லிவிட்டேன். மறுபடியும் மறுபடியும் அதை பேச வேண்டாம். உண்மையில் முதலீடுகள் வந்து தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் அதை தேமுதிக தான் வரவேற்கும். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதன்மூலம் நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வந்தால் அதை தேமுதிக தான் முதலில் வரவேற்கும்.
மக்களுக்கு நல்லது நடப்பது தான் முக்கியம். வெளிநாடு சென்று முதலீடு ஈர்ப்பதாக சொல்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்றே சொல்வதில்லை. இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திமுக தான் முதலில் தொடங்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் சொன்ன பிறகு நானும் பிரச்சாரம் செய்வேன்" என்றார். இதன் மூலம் விசிக, தேமுதிக இடையிலான வாக்குவாதம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
