அக் 2. மது, போதை ஒழிப்பு மாநாடு- திமுகவுக்கு அழைப்பு! முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு!
சென்னை: மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி நடப்பதில் தவறு இல்லை; ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்றும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்தார்.
2026 சட்டசபை தேர்தலை நோக்கி தமிழ்நாட்டு அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமான முடிவை நடைமுறைப்படுத்தி வருகிறது அதிமுக. இதனால் திமுக கூட்டணியில் தொகுதிகளை அதிகம் பெற வேண்டும் என விரும்புகிற கட்சிகள் இப்போதே அண்ணா திமுக கூட்டணியிலும் ஒரு கால் வைக்கத் தொடங்கி உள்ளன.

இதன் முதல் கட்டமாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவுக்கு அழைப்பு விடுத்தது. இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் திமுக தலைமையை சீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசி அந்த வீடியோவை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார் திருமாவளவன். அத்துடன் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போதும், மத்தியில் 1975-ம் ஆண்டு முதலே கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது. அப்படியானால் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி நடைபெறுவதில் தவறு எதுவும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை தேர்தல் அரசியலுக்கு வந்த காலம் முதலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது எனவும் பேசியிருந்தார் திருமாவளவன்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று திருமாவளவன் சந்தித்தார். அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக திருமாவளவன் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அக்டோபர் 2-ந் தேதி விடுதலைச் சிறுத்தைகள் மகளிர் அணி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பில் திமுகவுக்கும் அழைப்பு விடுத்தோம் என தெரிவித்தார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications