Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஜாதிக்குள் அடைக்கவில்லை.. எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மரியாதை உள்ளது”.. சர்ச்சைக்கு திருமா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த விசிக திருமாவளவன் கருத்து அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. திருமாவளவனுக்கு அதிமுகவினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் திருமாவளவன் புதிய விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே இருக்கிறது. இப்போதே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இடையே விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

thirumavalavan-mgr-controversy-thirumavalavan-explain-controversy-on-mgr-and-jayalalitha

திருமாவளவனுக்கு எதிர்ப்பு

அப்போது திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து வைத்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவர்களை ஜாதிய வட்டத்திற்குள் திருமாவளவன் அடைப்பதாக விமர்சனம் எழுந்தது.

இது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. முக்கியமாக இந்த கருத்துக்கு அதிமுகவினர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திருமாவளவன் அரசியலில் இருந்தே காணாமல் போய்விடுவார் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

விளக்கம்

திருமாவளவனின் பழைய கருத்துடன், இப்போது பேசிய வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி அதிமுகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு அரசியல் கடந்த 50,60 வருடங்களாக எப்படி இயங்கி வருகிறது, எப்படி கட்டமைக்கிறது என்பது பற்றி பேசினேன்.

அதில் ஒரு பகுதியாக எம்ஜிஆரை பற்றி குறிப்பிட்டேன். எனக்கு எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்புண்டு. ஜெயலலிதா மீதும் அதிக மதிப்புள்ளது. அவர்களை பல தருணங்களில் நான் மனம் விட்டு பாராட்டியுள்ளேன்.தமிழ்நாட்டு அரசியல் எப்படி கருணாநிதியை மையப்படுத்தி எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பது பற்றி அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசினேன். அவ்வளவுதான்.

அவமதிக்கும் நோக்கம் இல்லை

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. 8 மாத காலத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசை.திமுக கூட்டணியில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எல்லோருக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். அது உறவை அல்லது கூட்டணியை சிதைக்கும் வகையில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எந்தப் பொருளில் எங்கள் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது என நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். பாமக விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. நான் எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஜாதிக்குள் சுருக்கவில்லை. எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இயங்கியது, ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அப்போது கருணாநிதி எதிர்ப்பை முதன்மையாக கொண்டிருந்தனர் என்று தான் நான் விளக்கினேன்.

சுருக்கவில்லை

அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா தன்னை ஒரு பார்ப்பன பெண் மணியாக சட்டமன்றத்தில் அறிவித்தார். அதனால் அதிமுக பார்ப்பனியம், பார்ப்பனியர்கள் என்ற சக்தியால் விமர்சிக்கப்படவில்லை. கருணாநிதியை விமர்சித்தளவுக்கு அந்த குறிப்பிட்ட சக்தி எம்ஜிஆர், ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. அவர்களை அப்படி சுருக்கவில்லை. சுருக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+