இன்று இளையராஜா வீட்டுக்கு சென்ற திருமாவளவன்.. பவதாரிணி படத்துக்கு அஞ்சலி செலுத்தி ராஜாவுக்கு ஆறுதல்!
சென்னை: இளையராஜா இல்லத்திற்குச் சென்று, மறைந்த பாடகி பவதாரிணி திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் காலமானார். 1984-ல் வெளியான 'மை டியர் குட்டிச் சாத்தான்' படத்தின் வாயிலாக பின்னணி பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடியுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு உயிரிழந்தார். இளையராஜாவின் மகளான பவதாரிணியின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சென்னையில் இருந்து, அவரது சொந்த ஊரான தேனி அருகே உள்ள லோயர் கேம்ப் பண்ணைப்புரத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், கிராம மக்கள் பலர் பவதாரிணி உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில், இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள் மற்றும் மனைவி ஜீவா உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே பவதாரிணியின் உடல் அடக்கம் செயப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன், பவதாரிணி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடன் விசிக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், "அண்மையில் உடல்நலக்குறைவால் காலமான இசைஞானி இளையராஜா அவர்களின் மகள் பவதாரிணி அவர்களின் இல்லத்தில் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரை இழந்து வாடும் இளையராஜா அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications