வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏத்த சொல்றீங்க - ஆனால் "ஆர்எஸ்எஸ்" ஆபிசில்.. திருமாவளவன் நறுக் கேள்வி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவாரா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது.
கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மான் கி பாத்
இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மான் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மான் கி பாத் உரை மிகவும் சிறப்புமிக்கது.

75 வது சுதந்திர தினம்
அதற்கு முக்கிய காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நான் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

டிபி மாற்றிய பிரதமர்
ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.
Recommended Video

திருமாவளவன் பதிவு
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் தான். தேசியக் கொடியிலுள்ள தம்மச் சக்கரமான அசோக சக்கரம் கூடாது என்பதும் காவியைத் தேசியக் கொடியாக்க வேண்டும் என்பதுமே அவர்தம் நோக்கம்." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications