சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பயத்தை" பாஜகவுக்கு காட்டிய நிதிஷ்.. உயிர்ப்பித்த கூட்டணி.. ஆளுநர் ரவியை நினைத்தால்தான்.. திருமா நச்

பீகார் முதல்வராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமாருக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பீகாரை போல் இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார். அத்துடன் பாஜகவையும் கடுமையாக சாடி ஒரு பேட்டி தந்துள்ளார்.
கடந்த 2020, நவம்பர் மாதம்.. பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானாலும், பீகார் மாநிலம் பாஜகவின் பிடியில் சென்றது.

அப்போது திருமாளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. பாஜக எக்காரணம் கொண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என்று வலியுறுத்தி, அம்மாநில ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து, ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம் நீலகிரி,கோவையில் மிக கனமழை..6 மாவட்ட மக்களே உஷார்.. எச்சரிக்கும் வானிலை மையம்

சுருக்கம்

சுருக்கம்

அந்த அறிக்கையின் சுருக்கத்தை இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.. "புகார் கூறப்பட்ட தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை யாரையும் பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநரை வலியுறுத்துகிறோம். அதையும் மீறி ஆளுநர் செயல்பட்டால் அது ஜனநாயகப் படுகொலையாகவே இருக்கும். இந்த தேர்தல் முடிவின்படியேகூட ஆர்ஜேடி தான் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அதனால், ஆளுநர் முதலில் அக்கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டும். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போதுதான், அதற்கு அடுத்த பெரிய கட்சியாக இருக்கின்ற பாஜகவுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.

ஆளுமை

ஆளுமை

பாஜகவால் தனித்து களம் இறக்கப்பட்ட லோக் ஜன சக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று செல்வாக்கை இழந்து உள்ளது... ராம் விலாஸ் பாஸ்வானுக்கு பிறகு அக்கட்சியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை பற்றிய கேள்வியை இது எழுப்பியுள்ளது... பாஸ்வான் உயிரோடு இருந்தவரை மற்றவர்களால் ஆட்டி வைக்கப்பட முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார்... அதன் காரணமாகவே பீகாரிலும் தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. இதை சிராக் பாஸ்வான் புரிந்து கொள்ள வேண்டும்.

 திருமாவளவன்

திருமாவளவன்

மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காகத் தனது அரசியல் எதிர்காலத்தையே அவர் கெடுத்துக் கொள்ளக்கூடாது. பீகாரில் 16% வாக்காளர்களைக் கொண்ட தலித் வாக்குகளை பிரித்து சிதறடித்ததன் மூலம் அவற்றை மதிப்பிழக்கச் செய்திருக்கிறது பாஜக... அந்த அணியில் இடம்பெற்ற மாஞ்சியின் மகாதலித் கட்சி 4 இடங்களில் வென்றுள்ளது.. மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக நிதிஷ்குமாரை முதல்வராக திணிப்பதற்கு பதிலாக மாஞ்சியை ஏன் பாஜக முதல்வராக முன்மொழியக் கூடாது? அதை ஏன் சிராக் பாஸ்வான் வலியுறுத்தக்கூடாது?" என்றெல்லாம் திருமாவளவன் கேட்டிருந்தார்.

ட்விஸ்ட்கள்

ட்விஸ்ட்கள்

திருமா இப்படி கேட்டும்கூட, அதை அம்மாநில ஆளுநர் பொருட்படுத்தவில்லை.. அதேசமயம், பதவி ஏற்றதில் இருந்தே பாஜக கூட்டணி ஆட்சியில் உரசல்கள், அதிருப்திகள் வெடித்தன.. இந்நிலையில், நேற்றைய தினம் கூட்டணி ஆட்சி கலைந்துள்ளது.. நேற்று ஒரே நாளில் பலவித பரபரப்புகள் பீகார் அரசியலில் ஏற்பட்டன.. புது கூட்டணியுடன் இன்று நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.. இந்நிலையில் பீகார் நிகழ்வுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.. அதற்கு திருமா தந்த பதில்கள்தான் இவை:

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

"பீகாரில் பாஜகவிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது.. பாஜக கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார்... ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்.. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கக் கூடியதாக, ஜனநாயகத்தை நசுக்கக் கூடியதாக இருந்தது. 12-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்துவிட்டார்கள்.

ரஜினி

ரஜினி

பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அதுதான் சான்று. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தபோது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் திரும்பப்பெற்றனர்.. மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டனர்.. இங்கே ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்..

Recommended Video

    ஆளுநருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை - காந்தராஜ்
    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினி யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம்.. அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால், ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.. அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கான இணைப்பு போக்கை உருவாக்க வேண்டியது தான். ஆனால், அவர் ஆர்எஸ்எஸ்காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். அவரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்லாமல் தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது" என்றார்.

    English summary
    thirumavalavan says Democratic forces should unite across India like in Bihar and slams governor ravi பீகார் முதல்வராக பொறுப்பேற்கும் நிதிஷ்குமாருக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X