ஆணவக்கொலை தான்.. தவெகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கனும்.. தையூர் கொலை சம்பவம்.. கொதித்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது ஆணவக் கொலை தான் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலையில் தவெகவினர் சிலருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த தையூர் பிரவீன்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் படு கொலை செய்யப்பட்டார். காதலியின் தந்தை கூலிப்படையை ஏவி இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Thirumavalavan Says Thaiyur murder incident is an honor killing action must be taken against TVK members as well

இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இது ஆணவக் கொலை தான் என்றார். அவர் பேசியதாவது:-

சம்பந்தப்பட்ட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். காதல் விவகாரம் தான்.. அதுவும் ஆணவக் கொலை தான் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார் என்னிடத்தில் கூறினார். தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இதை நாங்கள் கொண்டு செல்ல இருக்கிறோம். ஆணவப் படுகொலை சட்டம் எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துவோம்.

இந்த இளைஞர்கள் படுகொலை வன்மையான கண்டனத்துக்கு உரியது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தவெகவினர் என கருத்தும் உள்ளது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+