"வாலாட்ட முடியாது".. குஷ்புவை விடுங்க..பாஜககாரங்க ரோட்டில வந்து போராடி பாத்தீங்களா?.. எகிறிய திருமா
திருமாவளவன் ஆயிரம் விளக்கு தொகுதியில் சென்னையில் பிரசாரம் செய்தார்
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் எழிலனை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது.. தேர்தலையும் சந்திக்கிறது.. இதனால் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.. திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் சென்னையில் தற்போது பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாரளர் குஷ்பு களமிறங்கி உள்ளார்.

ஆயிரம் விளக்கு
திருமாவளவன் பேசும்போது, "பாஜக இந்த 20 இடத்தில் நிற்கிறது.. ஆனால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது.. அவ்வளவு ஏன் ஒரு வார்டு எலக்ஷனில் கூட ஜெயிக்க மாட்டாங்க.. எப்படியோ, அதிமுகவை உருட்டி மிரட்டி 20 சீட் வாங்கிவிட்டார்கள்.. பாஜக ஒரு பொருட்டே நமக்கு இல்லை என்றாலும்கூட, பாஜக தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியே இல்லை என்றாலும்கூட, பாஜகவைதான் இன்று திமுக போட்டி கட்சியாக பார்க்கிறது.. அது அதிமுகவின் முதுகில் ஏறி கொண்டு சவாரி செய்கிறது..

குடிநீர்
இந்த தமிழ்நாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிடையாது. மோடிதான்.. அவர்தான் நமக்கு 5 வருஷமா முதல்வரா இருந்திருக்கிறார். நான் கேட்கிறேன், பாஜககாரன் என்னைக்காவது வீதியில் வந்து போராடி இருக்கிறானா? குடிநீருக்காக சாலையில் வந்து போராடி இருக்கானா? சமூக நீதி பற்றி அவர்கள் பேசி நீங்கள் கேட்டதுண்டா? பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றி அவங்க பேசியிருக்காங்களா? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்னாயிற்று என்று கேட்டதுண்டா? அவங்களை பாருங்க, எப்பவும் வெறும் மதத்தை மட்டுமே பேசுவாங்க.

இஸ்லாம்
"நீ இந்த மதம், நான் அந்த மதம்.. அவனை விடாதே.. அவன் இஸ்லாத்துக்கு மாற்றுகிறான்.. இவன் கிறிஸ்தவத்துக்கு மாற்றுகிறான்.. அவன் ஏன் பைபிள் படிக்கிறான்.. இவன் ஏன் குரான் படிக்கிறான்?" இப்படியே வெறுப்பு அரசியலை விதைத்து விதைத்து இந்துக்களை ஏமாற்றி, அதானியிடம் கொண்டு போய் அடமானம் வைக்கிற கட்சி தான் மோடி கட்சி.

பினாமி
அவர் இந்துக்களுக்காக பாடுபடுகிற தலைவர் இல்லை.. தன்னுடைய அதானிக்கு பாடுகிறார்.. மோடி உருவாக்கி வைத்திருக்கிற பினாமிதான் அதானி.. தொழிலதிபராக அதானியை உருவாக்கியவரே மோடிதான்.. மோடிக்கு குடும்பம் இல்லாமல் இருக்கலாம். சொத்து ஆசை இல்லாத துறவி போல நடிக்கலாம்.. ஆனால் அத்தனை சொத்தும் அதானி பெயரில்தான் இருக்கு.

இந்துக்கள்
இவர்களால் என்னைக்குமே சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாது.. இவர்களால் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாது.. வெறுப்பரசியலை உண்டாக்கி "நாம் இந்துக்கள்" என்று சொல்லி சொல்லி ஓட்டு திரட்ட முயற்சிக்கிறார்கள்.. வடமாநிலங்களில் இதை சாதித்திருக்கிறார்கள்.. ஆனால் இங்கே வாலாட்ட முடியவில்லை.. இப்போ கலைஞர் இல்லை , ஜெயலலிதா அம்மையார் இல்லை என்றதும் இங்கே நுழைந்துள்ளனர்.

சினி ஸ்டார்
அப்படிப்பட்ட அந்த கட்சியின் வேட்பாளராகத்தான் இங்கு ஒரு ஸ்டார் நிற்கிறார்.. சினி ஸ்டார் நிற்கிறார். அவருக்கும் கருத்தியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. கொள்கை, கோட்பாடுகளை பற்றி அவருடன் நாம் விவாதிக்கவும் முடியாது.. ஆனால், இங்கு நிற்கும் வேட்பாளர் எழிலனுடன் எந்த ஜாம்பவானும் கருத்தியல் ரீதியாக பேசி வெற்றி பெற்றுவிட முடியாது.. கலைஞருடன் நெருக்கமாக இருந்து, அந்த கருத்தியலை உள்வாங்கி இருக்கிறார் எழிலன் " என்றார்.












Click it and Unblock the Notifications