சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பிளானே" இதான்.. புட்டு புட்டு வைத்த திருமாவளவன்.. அறிவாலயத்தில் "அந்த" கட்சியையே திணறடித்த விசிக

திருமாவளவன் பாஜகவின் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் பிளான் இதுதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் பாயிண்ட் பாயிண்ட்டாக எடுத்து சொல்லி உள்ளார்.. இது பாஜகவை திணறடித்து வருகிறது.

Recommended Video

    SriLanka | Thirumavalavan கொடுத்த அலர்ட் | Anna Arivalayam | Oneindia Tamil

    இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் 4 சட்ட மன்ற உறுப்பின‌ர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதிய தொகையை விசிக தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.

    அதன் பிறகு, திருமாவளவன் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள அனைத்து பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர், குறிப்பாக ஈழத் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்ணாமலையை அழைப்பதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை புறக்கணித்த முற்போக்கு அமைப்புகள் அண்ணாமலையை அழைப்பதா? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை புறக்கணித்த முற்போக்கு அமைப்புகள்

    விசிக

    விசிக

    இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளார். அதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனைவரும் உதவி வருகின்றனர். விசிக சார்பில் 2 எம்பிக்கள் மற்றும் 4 எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியம் சுமார் 10 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளோம். அத்துடன் முதல்வரிடம் மூன்று கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு மாகாணத்தை ஒரே கவுன்சிலாக ஆதரித்து ஈழ மக்களுக்காக வழங்கிட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

     செஞ்சிலுவை

    செஞ்சிலுவை

    இந்த நிதியுதவி த‌மிழ‌ர்களு‌க்கு போய் சேர வேண்டும். அதற்காக இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர், தமிழ்நாடு அரசின் பிரதிநிதி ஒருவர், சர்வதேச செஞ்சிலுவை சார்பில் ஒருவர் என மூவர் கொண்ட குழு அமைத்து, அவர்கள் மூலம் இந்த பொருட்களை, நிதியை முறையாக அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... குறிப்பாக மலையக தமிழர்களுக்கு இந்த நிதி உதவி சென்று சேர வேண்டும்.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    பாஜக தலைவர் அண்ணாமலையின் எண்ணத்தை நீட் விவகாரத்தில் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். பாஜகவின் திட்டங்களை தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று அண்ணாமலை சொல்லி வருகிறார். ஆனால் பாஜக திட்டம் வேறு, இந்திய அரசின் திட்டம் வேறு,.. தமிழக அரசின் திட்டம் வேறு.. இந்துக்களை சமூகரீதியாக பிரிப்பது, அதாவது இந்துக்களாகவும், இந்துக்கள் அல்லாதவர்களாகவும் பிரிப்பதுதான் தான் பாஜகவின் திட்டம்..

     கீழ்சாதி

    கீழ்சாதி

    இந்துக்களை மேல்சாதி, கீழ்சாதி ஒவ்வொருவரையும் பிரிக்கும் திட்டம்.. அந்த அரசுக்கு நேர் எதிரானது தமிழகத்தின் திமுக அரசின் சமூகநீதி திட்டம்.. எனவே, பாஜகவின் திட்டம் என்று சொல்வதே அரசியல் விளையாட்டுதான்.. திமுகவை விமர்சிப்பதன் மூலம், திமுகவுக்கு தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளும் ஒரு முயற்சிதான். அதுவும், அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுகவிற்கு எதிர்கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணம்.

     இனவாத பாசிசம்

    இனவாத பாசிசம்

    இலங்கை விவகாரத்தை பொறுத்தவரை, சொந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகி உள்ளோம் என்பதை ராஜபக்சே உணர வேண்டும்.. அப்படி உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் கருதுகிறேன்.. இனவாத பாசிசம் எந்த அளவுக்கு தனக்கு எதிராக திரும்பும் என்பதை அவர் இந்த சூழலில் அவருடைய குடும்பம் உணரும், உணர வேண்டும்.

     ஆன்மீக அரசு

    ஆன்மீக அரசு

    "இது ஆன்மீக அரசும்கூடதான்" என்று முதல்வர் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.. ஏனென்றால், கட்சியின் நிலைப்பாடு வேறு, அரசின் நிலைப்பாடு வேறு.. ஒரு கட்சியின் நிலைப்பாட்டை, எல்லா நேரங்களிலும் நடைமுறைப்படுத்தி, பொருத்திப்பார்க்க முடியாது.. அரசு என்பது அனைத்து தரப்புக்குமானது.. அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை அளிக்க கூடியது.. அந்த வகையில், பாஜக, சங் பரிவார், மதவாத அரசியலை கையில் எடுத்து, இங்கே தொடர்ந்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.. அதன்மூலம் காலூன்ற துடிக்கிறார்கள்.. அவர்களின் சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில், முதல்வர் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.

    English summary
    Thirumavalavan slams bjps principles and says about tn leader annamalai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X