என் கணவர் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாங்க? மாவீரனா? கொலைகாரனா? திருமாவை கேட்கும் சுவிதா யுவராஜ்.!
சென்னை: சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை பெற்ற தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோலில் வந்த அவரை பல்வேறு சாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். இதற்கிடையே கொலைகாரனை மாவீரன் போல பேசுவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருந்த நிலையில், தனது கணவர் கொலைகாரன் இல்லை எனவும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அப்படி பேசக்கூடாது எனக் கூறியிருக்கிறார் யுவராஜின் மனைவியான சுவிதா.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் கோகுல்ராஜ் தலை உடைக்கப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

காதல் விவகாரத்தில் கோகுல் ராஜை சங்ககிரி கருங்காலி மேடு பகுதியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களும் திரட்டப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில் யுவராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக யுவராஜ் சிறையில் இருக்கும் நிலையில் அவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள யுவராஜுக்கு ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் யுவராஜ் கலந்து கொண்டார். அவரை பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா மற்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர். தொடர்ந்து சிறைக்கு செல்வதற்கு முன்பதாக தனது ஆதரவாளர்களிடையே யுவராஜ் பேசினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் 'மாவீரா' என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை ஹீரோ போல சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கொலை குற்றவாளியை மாவீரன் என்பது போல பேசுவதா என கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆணவப் படுகொலை செய்வது எல்லாம் ஒரு விசயமே இல்லை என்கிற தொனில தான் இந்தம்மா பேசுது, அவன் ஒரு கொடூர கொலைகாரன் என்கிற அறிவு கூட இல்லாமல் தான் இவங்க இப்படி பேசுறாங்களா.?
— கபிலன் (@_kabilans) March 17, 2025
நியாமாக தமிழக அரசு இந்த ஜாதி அமைப்பை தடை செய்யனும், எதுக்காக கொலைகாரனை சிறையில் இருக்கவனுடைய அமைப்பை எல்லாம்… pic.twitter.com/vMUfsUhqFj
இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் யுவராஜின் மனைவியான சுவிதா. இது தொடர்பாக பேசியுள்ள அவர், "என் கணவர் ஏதோ ஜாதி நிகழ்ச்சிக்கோ, கடி நிகழ்ச்சிக்கோ வரவில்லை. தனது வீட்டில் நடைபெற்ற தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்திருக்கிறார். அதை வைத்து தேவையில்லாமல் அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சித்து வருகின்றனர். எனது கணவர் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்.
தேவையில்லாமல் பேசுகிறார்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை பேசுவதை விட்டுவிட்டு எனது கணவரை விமர்சிக்கிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் போது அதைப் பற்றி பேசாமல், ஒரு அரசியல் தலைவர் எனது கணவர் குறித்து பேசி இருக்கிறார். அவர் மாவீரனா என கேட்டிருக்கிறார். முதலில் எனது கணவரை கொலையாளி எனக் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. நாங்கள் குற்றவாளி அல்ல நிரூபித்து அனைவரும் வெளியே வருவோம்" என பேசி இருக்கிறார்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications