கோபத்தில் தொண்டரை கன்னத்தில் அறைந்த திருமாவளவன்.. தேனியில் பரபரப்பு.. நடந்தது என்ன?
தேனி: தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சித் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் சக்திவேல் என்பவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். விசிக வேட்பாளர் சக்திவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று பெரியகுளம் பகுதிக்கு வருகை தந்து பானை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வந்த பிரச்சார வாகனத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் மது போதையில் வாகனத்தில் ஏறி அவரை பேச விடாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது விசிக தலைவர் தொல் திருமாவளவன் கீழே இறங்குமாறு பலமுறை கூறியும் அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து அவரது கட்சியினர் மது போதையில் வாகனத்தில் ஏறி அவரை பேசவிடாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த திருமாவளவன், வாகனத்தில் மது போதையில் இருந்த கட்சி இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்து அவர்களை இறங்குமாறு கண்டித்தார். மேலும், திருமாவளவன் கடும் கோபமாக நான் பேசவா? வேண்டாமா? எனக் கேட்டார். அதனைத் தொடர்ந்தும் கூட, வாகனத்தை விட்டு இறங்காமல் இளைஞர்கள் அவர் பேசும்போது பின்னால் நின்று கொண்டு வாகனத்தில் கூச்சலிட்டவாறு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பேசி முடித்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என எதிர்பார்த்து அக்கட்சி தொண்டர்கள் காத்திருந்த நிலையில் மாலை அணிவிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications