தமிழக வேலன், வங்கத்து காளி, கேரளத்து ஐயப்பன் அளித்த தீர்ப்பே பாஜகவின் படுதோல்வி.. திருமா ட்வீட்!
சென்னை: தமிழ்நாடு வேலன், மே.வங்கம் காளி, கேரளா அய்யப்பன் ஆகியோரின் தீர்ப்புக்கு- படுதோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா ஆகியோர் உடனே #பதவி_விலக வேண்டும் என திருமாவளவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைய தினம் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி அமோகமாக வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வருகிறது.
ஸ்டாலின் முதல்வராகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆட்சி
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருமாவளவன் தனது ட்விட்டரில் திமுக ஆட்சி அமைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள்
இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அசாம், புதுவை தவிர மே.வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக'வுக்கும் அதன் அணிக்கும் எதிராக மக்கள் #மரணஅடி கொடுத்துள்ளனர்.

படுதோல்வி
தமிழ்நாடு வேலன், மே.வங்கம் காளி, கேரளா அய்யப்பன் ஆகியோரின் தீர்ப்புக்கு- படுதோல்விக்குப் பொறுப்பேற்று மோடி, அமித்ஷா ஆகியோர் உடனே #பதவி_விலக வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அது போல் மற்றொரு ட்வீட்டில் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
|
அம்பேத்கர்
#தமிழகத்தின்_முல்வராகப் பதவி ஏற்கவிருக்கும் அண்ணன் #தளபதி_மு_க_ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் மனம் நிறைந்த வாழ்த்துகள். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் #சமூகநீதியைக் காக்கவும் தமிழ், தமிழர் நலன்களை மீட்கவும் #நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications