கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!
சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இக்கட்சி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. இந்நிலையில், மநீம போட்டியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது, கருத்தியல் வலிமை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று திருமாவளவன் வேதனை தெரிவித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் எது முக்கியம்?
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கூட்டணி கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்த அளவீடுகளில் வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்ட வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் கூட்டணியில் இடப்பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வரையறைகளுக்கு உட்படாத சில கட்சிகளை அவற்றின் சமூக அடையாளங்களை பின்னணியாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், கட்சிகளின் "கருத்தியல் வலிமை" ஒரு அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மையாகவுள்ளது.
தொகுதிப் பங்கீடு நடக்கிறபோது ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதி எண்ணிக்கைகள் எத்தகைய வரையறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அவ்வப்போது நிலவும் அரசியல் சூழல்களைப் பொறுத்து அமைகின்றன. அத்துடன், கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறைகளைப் பொறுத்தும்; கூட்டணியின் தலைமை கையாளும் அரசியல் உத்திகளைப்பொறுத்தும் இடப்பகிர்வுகள் நிகழ்கின்றன.
வரலாற்றுத் தேவை
கூட்டணிக்குத் தலைமை வகிப்பவரின் நிலையிலிருந்து ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்துக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்த்து தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டியது கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிக்குமுள்ள பொறுப்பாகும். கொள்கைப் பகையை வீழ்த்துவதும் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வதும் ஒவ்வொரு கட்சியின் கடமை.
ஆனால், அந்தக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்கவேண்டியது தலைமைக்குரிய தவிர்க்கமுடியாத பொறுப்பாகும். கருத்தியல் வலிமையை இன்றியமையாத ஒரு அளவுகோலாகக் கொண்டு இடப்பகிர்வு உள்ளிட்ட அணுகுமுறைகளைக் கையாள வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகவுள்ளது.
இடதுசாரிகளை அரவணைக்க வேண்டும்
கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த தோழமை சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமே கொள்கைப் பகையை இம்மண்ணில் வேரூன்ற விடாமல் தடுக்க முடியும். அத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட இடதுசாரி தோழமை சக்திகளை அரவணைப்பதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கவேண்டியதும் அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதன்மூலம் ஒட்டுமொத்த கூட்டணிக்குமான நன்மதிப்பு மக்களிடையே பன்மடங்காகப் பெருகும்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நெருடல்
தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவளையில் மதசார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
திமுகவின் செயல் ஏற்புடையதல்ல
தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவியாகும். அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிடவிரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது ஏற்புடையதல்ல. அது அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கிப் போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே சனநாயகத்துக்கும் செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.
கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத -திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் அவர்களும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.
வாக்கு வங்கி வலிமை
மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், 4 சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்'கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.
டார்ச்' சின்னத்தில் போட்டியிட அனுமதி
தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்!" என பதிவிட்டிருக்கிறார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்















Click it and Unblock the Notifications