இது வீடா இல்லை கட்சி ஆஃபிஸா? வியந்து பார்த்த திருமாவளவன்! எலக்ஷன் பரபரப்பிலும் கூல் விசிட்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும், சென்னை வேளச்சேரியில் தனது பக்கத்து தெருக்காரர் விடுத்த அழைப்பை ஏற்று புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன், அங்கிருந்த புகைப்படங்களை கண்டு வியந்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் விசிகவுடன் திமுக சீட் ஷேரிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளை கேட்கலாம், எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற டிஸ்கஷனில் சில நாட்களாக தீவிரமாக உள்ளார் திருமாவளவன்.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த நவீன் என்பவர் தனது இல்லத்தின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள வேண்டும் என திருமாவளவனை சந்தித்து சில நாட்களுக்கு முன்னர் அழைப்பிதழ் அளித்திருக்கிறார். அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த தேதியில் திருமாவளவனுக்கு மதுரையில் முதலமைச்சருடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி இருந்திருக்கிறது.
இருப்பினும் அழைத்திருப்பது பக்கத்து ஏரியாக்காரரே என்பதால் விமான நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றுவிட்டுச் செல்வோம் என அங்கு சென்றிருக்கிறார் திருமா. அங்கு, பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், ஆகியோரின் படங்கள் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் இது வீடா இல்லை கட்சி ஆபிஸா என்கிற வகையில் திருமாவளவன் வியந்துபோனார்.
தனக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்பதையும் மறந்து வீட்டின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை வாழ்த்தி பாராட்டியிருக்கிறார். ''அண்ணே ப்ஃளைட்டுக்கு டைம் ஆகிறது.. வாங்க போகலாம்..'' என தன்னுடன் வந்த கட்சிக்காரர்கள் அழைத்ததும் தான், தனக்கு மதுரையில் முதல்வருடன் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி இருக்கிறது என்பதை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.
இதனிடையே புதுமனை புகுவிழாவுக்கு திருமாவை அழைத்த நவீன் என்பவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. சென்னை வேளச்சேரியில் தனது பக்கத்து ஏரியாக்காரர் அழைத்து செல்லாமல் இருப்பதா என்பதால், அவரது அழைப்பை ஏற்று அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications