விசிக மாநாட்டு நிதிக்காக QR code scanner! மாவட்டச் செயலாளர்களுக்கு டார்கெட் நிர்ணயித்த திருமாவளவன்!
சென்னை: வரும் 23ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள விசிக மாநாடுக்கு மாவட்டச் செயலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2 நிதி தர வேண்டும் என்றும் அதற்கு மேலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் எனவும் திருமாவளவன் டார்கெட் பிக்ஸ் செய்துள்ளார்.
அதேபோல் மாநாட்டு நிதிக்காக QR code scannerஐ உருவாக்கி அதனை நேற்றிலிருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு ஆட்களை திரட்டுவதற்காக மண்டலம் வாரியாக சுற்றுப்பயணம் சென்று வரும் அவர் நிர்வாகிகள் மத்தியில் கூறியதாவது;

''தமிழ்நாடு முழுவதும் திரும்பும் திசை எல்லாம் வெல்லும் சனநாயகம் மாநாட்டு சுவர் விளம்பரங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் வழிநெடுக்கும் மாநாட்டு விளம்பரங்கள் இடம் பெற வேண்டும். "வெல்லும் சனநாயகம் மாநாடு" 'சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்' என்று வாசகத்தோடு இணைத்தே எழுத வேண்டும். "வெல்லும் சனநாயகம்" என்ற இரு வார்த்தைகளும் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்.
சொந்தமாக செலவு செய்து விளம்பரங்களை (சுவர் விளம்பரம், பேனர், சுவரொட்டி, துண்டறிக்கை) செய்பவர்கள் உங்களின் பெயர்களை முதன்மைப்படுத்திக் கொள்ளுங்கள் அதில் தவறில்லை. அதே நேரத்தில் மாவட்டச் செயலாளர் படம் மற்றும் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
மற்றப் பொறுப்பாளர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் கட்டாயம் போட வேண்டும் என்று தேவையில்லை.
நீங்கள் விருப்பப்பட்டால் யார் படம் வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அப்படி போடாதவர்களை எந்த பொறுப்பாளர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அப்படி தனிப்பட்ட நபர்களை மிரட்டும் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும், உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திசம்பர் 23-ம் தேதி மாநாடு அன்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் உங்கள் மாவட்டங்களின் செய்தித்தாள்களில் கட்டாயம் கால் பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டும். அதேபோல வார இதழ், மாத இதழ் புத்தகங்களிலும் மாநாட்டு விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்கள், மக்கள் கூடும் கடைத்தெரு பகுதிகள் என அடையாளம் கண்டு அங்கெல்லாம் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்ட வேண்டும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தனியாக குறைந்தது 50 பேனர்கள், 300 சுவரொட்டிகளை வச்சிட்டு உங்கள் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்ட வேண்டும்.
மாநாட்டுக்கான தேவைகள் அனைத்தையும் நாம் ஏற்பாடு செய்வதற்கு மிக முக்கியமானது பொருளாதாரம் அவசியமானது. மற்ற பெரிய கட்சிகளை போல நாம் நிதி ஆதாரங்களை கொண்ட கட்சி அல்ல. நான் கேட்கும்போதெல்லாம் 'என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள்' நீங்கள் வழங்கும் நிதியிலிருந்து தான் நாம் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வெற்றிகரமாக நடித்திருக்கிறோம். அந்த வகையில் இந்த 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டை நாடே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறோம்.
அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு என்பது மிக அவசியமானதாகும். அந்த வகையில் கட்சியில் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தது 2 லட்சம் ரூபாய் கட்டாயம் நிதி வழங்க வேண்டும். மேலும், கூடுதலாக எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் வழங்கலாம் என்றும் அறிவித்திருக்கிறோம். அந்த வகையில் மாவட்டச் செயலாளர்கள் திசம்பர் 15-ம் தேதிக்குள் கட்சியின் வங்கி கணக்கில் மாநாட்டு நிதியை கட்டாயம் போட்டுவிட வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னணி பொறுப்பாளர் தவிர்த்து மாநாட்டுக்காக நிதி யார் வேண்டுமானாலும் வழங்குவதற்கு எளிமையான முறையில் QR code scanner (Quick Response code) உருவாக்கி இருக்கிறோம். இவை டிசம்பர் 1-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. நமது கட்சி முன்னெடுக்கும் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுள்ள யார் வேண்டுமென்றாலும் இந்த QR code scanner பயன்படுத்தி எவ்வளவு நிதி வேண்டும் என்றாலும் எந்த நேரத்திலும் போடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.''
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications