இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்
சென்னை: திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடியவில்லை. விசிக இரட்டை இலக்கத்தில் சீட் கோரும் நிலையில் திமுக மறுத்து வருகிறது. இதனால் இருகட்சிகள் இடையே இன்னும் உடன்படிக்கை ஏற்படவில்லை. இன்றைய தினம் மீண்டும் இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இதற்கிடையே தான் இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்றும் திருமாவளவன் போர் கொடி உயர்த்தி உள்ளார். இதுதொடர்பாக விசிக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் திமுகவின் பிளான் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. 2 இடங்களில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 2 இடங்களிலும் விசிக வெற்றி பெற்றது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக மாறியது. இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது. ஆனால் திமுகவோ 6 அல்லது 7 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்து வருகிறது. இதனால் இருகட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
விசிகவின் 8 தீர்மானம்
இந்நிலையில் தான் நேற்று சென்னை கோயம்பேடு தனியார் விடுதி ஒன்றில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தம் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் விசிகவிற்கு திமுக இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஆதரவாக முதல் தீர்மானம்
இதில் 1வது மற்றும் 8வது வது தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். முதல் தீர்மானத்தில் 2026 ஏப்ரல் 23 ம் தேதி அன்று நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், விடுதைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' , வலதுசாரி பிற்போக்கு சக்திகளையும் அவர்களுக்கு மறைமுகமாகத் துணைநிற்கும் திரிபுவாத சக்திகளையும் வீழ்த்தி, 200 இடங்களுக்கும் மேலாக மகத்தான வெற்றியைப் பெற வேண்டும்.
அதற்கேற்ப தமிழகம் தழுவிய அளவில் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த பொறுப்புணர்வோடும் தீவிர முனைப்போடும் களப்பணி ஆற்றுவோம் என இந்த உயர்நிலைக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.
இரட்டை இலக்க தொகுதி + ராஜ்யசபா
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்களிப்புச் செய்துள்ளது. எனவே, கட்சியின் வலிமைக்கேற்ப எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 'இரட்டை இலக்கத்தில்' தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டுமென்றும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் விசிக'வுக்கு ஒரு இடத்தைக் கேட்டுப் பெற வேண்டுமென்றும் திருமாவளவனிடம் இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் பிளான் என்ன?
இந்த தீர்மானம் வழியாக திமுகவுக்கு, திருமாவளவன் பிரஷர் போடுகிறார். இருப்பினும் கூட இந்த பிரஷருக்கு திமுக பணியாது என்கின்றனர். விசிக தொடக்கம் முதலே இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதி கேட்டு வருகிறது. ஆனால் திமுக கடந்த முறையே போலவே 6 தொகுதிகளையும், புதுச்சேரியில் வேண்டுமானால் ஒரு இடங்களையும் தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முடிவில் இருந்து திமுக இறங்கி செல்லாது என்று கூறப்படுகிறது. எப்படியாவது சமாளித்து இந்த தொகுதிகளுக்கு விசிகவை திமுக ஒப்புக்கொள்ள வைத்துவிடும் என்கின்றனர் அரியல் நோக்கர்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமை தானாம்
இதனால் விசிகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமை தான் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 2 கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த முறை இருகட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்டன. ஆனால் திமுக கொடுக்கவில்லை.
மாறாக கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இருப்பதாக கூறி தலா ஒரு சீட்டை குறைத்து இருகட்சிளுக்கும் 5 தொகுதிகளை வழங்கி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4வது கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் பணிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிடிவாதம் பிடித்த நிலையில் நேற்று திமுக சமாதானம் செய்து 5 தொகுதிகள் என ஒப்பந்தம் செய்தது. அதுபோல் தான் விசிகவையும், திமுக பணிய வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்
















Click it and Unblock the Notifications