திருக்குறளில் ஜாதி இல்லை.. தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.. திருமுருகன் காந்தி அதிரடி கருத்து!
திருக்குறளில் ஜாதி பற்றி எதுவும் இல்லை, தமிழர்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திருக்குறளில் ஜாதி பற்றி எதுவும் இல்லை, தமிழர்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியின் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் தொடர்பாக செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக டிவிட் செய்தது.
இதற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. வள்ளுவரை பாஜக அவமானப்படுத்திவிட்டது என்று பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

என்ன கருத்து
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் அமைதி நிலவ கூடாது. மக்கள் இடையே கலவரம் ஏற்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இங்கு வன்முறை அரசியலை கொண்டு வர பாஜக முயன்று வருகிறது.அதில் ஒரு பகுதிதான் திருவள்ளுவரை வைத்து அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதும்.

திருவள்ளுவர்
பாஜக திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறள் தமிழர்களுடைய சொத்தாக உள்ளது. அது ஒரு மத நூல் கிடையாது. அது மொத்த உலகத்திற்குமானது. அது உலகப் பொதுமறை. தமிழர்களின் அற நூலாக திருக்குறள் இருக்கிறது.

இந்துத்துவா நூல் இல்லை
ஆனால் பாஜக அதை இந்துத்துவா நூலாக மாற்ற நினைக்கிறது. திருக்குறளை ஏதோ இந்து மதத்தின் அடையாளமாக்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள். அதற்கு காவி வண்ணம் பூச முயல்கிறார்கள். திருக்குறள் மனிதனை சாதி ரீதியாக இது பிரித்து பார்க்கவில்லை.

ஜாதி இல்லை
அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அழுத்தமாக அனைவரும் உணர்த்தும் நூலாக திருக்குறள் இருக்கிறது. திருவள்ளுவர் தமிழர். அவருக்கு மதம் கிடையாது. தமிழர்கள் ஏமாற தயாரில்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒன்றும் பாஜக உறுப்பினர் கிடையாது, என்று திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications