சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசு இல்லை என்று ஒருவர் கூட இருக்கக்கூடாது.. இதுதான் ராகுலின் திட்டம்.. திருநாவுக்கரசர் அதிரடி!

ராகுல் காந்தியின் புரட்சிகர திட்டம் குறித்து திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல நாளாக பிளான் போட்ட பாஜக.. அதிரடியாக அறிவித்த காங்கிரஸ்

    சென்னை: செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்கு வங்கிக் கணக்கில் மாதந்தோறும் பணம் செலுத்தும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியின் செயல்பாட்டையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டு பேசியதுடன், ராகுலின் புரட்சிகரமான திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    அப்போது அவர் சொன்னதாவது: "ஏழைகளை வாழ வைக்கும் சிறப்பான திட்டம் ஒன்றினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    செலவுக்கு பணம்

    செலவுக்கு பணம்

    அதன்படி, செலவுக்கு பணம் இல்லை என்று ஒருவர் கூட நாட்டில் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களுக்கு வங்கி கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    வங்கியில் பணம்

    வங்கியில் பணம்

    இது ஒரு புரட்சிகரமான திட்டமாகும். அனைவருக்கும் எவ்வளவு பணம் வங்கியில் செலுத்தப்படும் என்பதை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் விரைவில் தெரிவிக்கப்படும்.

    மோடி அலை ஓய்ந்தது

    மோடி அலை ஓய்ந்தது

    ராகுல் காந்தி பிரதமர் ஆனதும் இந்த திட்டம்தான் முதன்முதலில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியா முழுவதும் மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை மட்டுமே தங்கியிருக்கிறது.

    எய்ம்ஸ் மருத்துவமனை

    எய்ம்ஸ் மருத்துவமனை

    கூட்டணி கதவை திறந்து வைத்து பாஜக காத்திருந்தாலும், யாரும் அதனுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்பதே உண்மை. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை உருவாக்கியது காங்கிரஸ் அரசுதான் என்பதை பெருமையுடன் சொல்வோம்.

    English summary
    Thirunavukarasar said that if Rahul Gandhi took over as PM, he would be paid monthly on the people's bank account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X