ஸ்டாலினை சீண்டிய திருநாவுக்கரசர் எம்.பி.! நான் அதிகம் பேசமாட்டேன்! சுடச்சுட பதிலடி தந்த முதல்வர்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், முதலமைச்சர் ஸ்டாலின் அதிக நேரம் பேசுவார் எனக் கூறியது அவரை சீண்டும் வகையில் அமைந்திருந்தது.
யாரு? நான் அதிக நேரம் பேசுவனா? என்பதை போல் ஒரு ரியாக்ஷனை வெளிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த சில நொடிகளில் அந்த மேடையிலேயே திருநாவுக்கரசருக்கு பதிலடி கொடுத்தார்.
தாம் பேசுவதை காட்டிலும் செயலில் தான் தனது திறமையை காட்டுவதுண்டு எனக் கூறி கைதட்டல்களை அள்ளினார் முதல்வர் ஸ்டாலின்.
இதை ஏற்கனவே பல நிகழ்வுகளில் ஸ்டாலின் கூறியிருந்தாலும் திருநாவுக்கரசர் எம்.பி.க்காக மீண்டும் அதை இன்று குறிப்பிட்டு பேசினார்.
இது தொடர்பாக ஸ்டாலின் திருமண விழாவில் பேசியதாவது;

''நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் பேசுகிறபோது சொன்னார், இங்கு வந்திருக்கும் முதலமைச்சர் நீண்ட நேரம் பேசுவார் என்று.
நான் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. செயலில்தான் நம்முடைய திறமையை காட்டுவதுண்டு - என்கிற அந்த கொள்கை உணர்வோடு இருந்து கொண்டிருப்பவன்.
நிதிநிலை ஒரு கொடுமையான பற்றாக்குறை இருந்தாலும், இன்றைக்கு ஒன்றிய அரசு நமக்கு தேவையான அளவிற்கு துணை நிற்காவிட்டாலும், அதை எல்லாம் தாண்டி - அதை எல்லாம் மீறி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக -நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு மாநிலமாக வளர்ந்து வந்திருக்கிறோம், வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.
மாநில உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது - மாநில உரிமைக்கு நாம் போராட வேண்டும் என்ற அந்த நிலையிலும் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.''
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications