Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் மாமியாரின் கையை பிடித்து விரலை கடித்து.. திருநெல்வேலி பஸ் ஸ்டாப்பில் கொடுமை! திகைத்த மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரம் கூறுகிறது.. இந்த குடும்ப வன்முறைகளால் இளம் வயதினரின் விவாகரத்துகளும் பெருகிவிட்டதாக நீதிமன்றங்களும் கவலை தெரிவித்து வருகின்றன.. குடும்ப வன்முறையை களைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், பெருமளவு பலன் இன்னும் கிட்டவில்லை.. இந்நிலையில், நெல்லையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கணவன் அல்லது உறவினர்களால் கொடுமை என்ற சட்டப்பூர்வ வார்த்தையின் கீழ் பெரும்பாலும் புகாரளிக்கப்படும் குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைக் குற்றமாகும்.

Thirunelveli Nellai Bus Stop

இத்தகைய வன்முறை இந்தியாவில் மட்டுமே கிடையாது, உலகளவில் மூன்றில் ஒரு பெண் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.. அதில் பெரும்பாலானவை நெருங்கிய துணையால் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது..

நெல்லையில் புகார் தர எண்

தமிழகத்திலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை முடக்க அரசு பல சேவைகளை வழங்கி வருகிறது.. தற்போதுகூட குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் நெல்லை வட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது..

அதில், "நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால் உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 8220387754 என்ற எண்ணில் புகார் தரலாம்" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நெல்லை தொழிலாளி துரைராஜ்

ஆனால், இதே நெல்லையில் மீண்டும் ஒரு கொடுமை நேற்றைய தினம் நடந்துள்ளது.. நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்., இவருக்கு 33 வயதாகிறது.. அங்குள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்..

அதே பகுதியில் வசித்து வரும் பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை, துரைராஜ் திருமணம் செய்துள்ளார்.. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வெடித்து வந்துள்ளது.. தினம் தினம் நடந்த குடும்ப பிரச்சினையால் மனம் வெறுத்துப்போன தங்கலட்சுமி, தன்னுடைய 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.

பஸ் ஸ்டாப்பில் தங்க லட்சுமி

கடந்த 7 மாதங்களாகவே, தங்கலட்சுமி தன்னுடைய அம்மா வீட்டில்தான் தங்கியிருக்கிறார்.. இந்நிலையில், நேற்று காலை தங்கலட்சுமி தன்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக அங்குள்ள பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்கிறார்.. அப்போது அங்கு வந்த துரைராஜ், தங்கலட்சுமியிடம் பேச்சு தந்தார்..

பிறகு திடீரென 2 பேருக்கும் வாக்குவாதம் வெடித்தது.. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த தங்கலட்சுமி, வீட்டிலுள்ள தன்னுடைய அம்மா பேச்சியம்மாவுக்கு போன் செய்து, விஷயத்தை சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், உடனே பஸ் ஸ்டாப்புக்கு ஓடிவந்தார்.. அங்கே தங்கலட்சுமியும், துரைராஜூம் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், அவர்களின் மோதலை தடுக்க முயன்றார்.

ஆனால் மாமியாரை பார்த்ததுமே துரைராஜ் மேலும் ஆத்திரமடைந்தார்... இதனால் 3 பேருக்கும் மாறி மாறி வாக்குவாதம் வலுத்தது.. அப்போது துரைராஜ், தன்னுடைய மாமியார் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து அவரது விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது... இதனால் பேச்சியம்மாளின் கை விரல் கிழிந்து தொங்கி, ரத்தமாய் கொட்டியது.. வலி பொறுக்க முடியாமல் பேச்சியம்மாள் அலறி துடித்தார்..

உடனே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள், பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+