திருநெல்வேலிக்கே "அல்வா" கிடைச்சாச்சே.. கோவையை சட்டென ஓவர்டேக் செய்த நெல்லை.. அதுக்குள்ளயா? சூப்பர்ல
சென்னை: நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு, நாளுக்கு நாள் பயணிகளிடம் மவுசு கூடிக்கொண்டே வருகிறதாம். இதுகுறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது வந்தே பாரத் ரயில் சேவை.. அதிநவீன வசதிகளுடன் அதிவிரைவு ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இப்போதைக்கு மொத்தம் 34 வந்தே பாரத் ரயில்கள்இயக்கப்படுகின்றன.. இதில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, விஜயவாடா - சென்னை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் ரயில் சேவையானது, சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
வழக்கமான விரைவு ரயில்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல வேண்டுமானால், எப்படியும் 11 மணி நேரம் ஆகிவிடும்.. ஆனால், வந்தே பாரத் ரயிலில் வெறும் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றுவிடலாம்..
சாமானிய மக்கள்: இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும், 7 AC சேர் கார் பெட்டிகளும் என்று 8 பெட்டிகளில் மொத்தம் 590 பேர் பயணிக்க முடியும். எனினும், இதில், கட்டணம் மிக அதிகமாக உள்ளது.. அதனால்தான், சாமானிய மக்களும் பயணிக்கும் வகையில், "எகனாமிக்" வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், நெல்லை வந்தே பாரத்து சேவைக்கு பொதுமக்கள் நிறையவே ஆதரவு தந்துவருகிறார்களாம். குறிப்பாக, அறிமுகம் செய்யப்பட்டபோது, கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகள் வருவார்களா? என்ற தயக்கம் இருந்ததாம்.. ஆனால், நெல்லை வந்தே பாரத் ரெயில், தென் மாவட்ட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவதாக கூறுகிறார்கள்.
தீபாவளி பண்டிகை: மேலும், தமிழகத்திற்குள் இயக்கப்படும் நெல்லை, கோவை வந்தே பாரத் ரெயில்களில் நெல்லை வந்தே பாரத் ரெயிலில் அதிகளவு மக்கள் பயணிக்கிறார்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பயணம் செய்ய எல்லா இடங்களும் நிரம்பி விட்டனவாம்.

இதுகுறித்த தெற்கு ரயில்வே சொல்லும்போது, "திருவனந்தபுரம்- காசாகோடு வந்தேபாரத் ரயிலை 192 சதவீதம் மக்கள் பயன்படுத்துகிறார்கள். காசர்கோடு-திருவனந்தபுரம் சேவை 188 சதவீதமாக இருக்கிறது. சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்வோர் சதவீதம் 134 ஆக உள்ளது.
பெருமிதம்: அதற்கு அடுத்ததாக எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரெயிலில் பயணிப்போரின் சதவீதம் 120 ஆக உள்ளது. சேவை தொடங்கி வெறும் ஒரு மாத காலத்திலேயே இந்த அளவிற்கு மக்கள் முழு அளவில் பயணம் செய்வது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நிலையில் தான் சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு 107 சதவீதமாகவும், கோவையில் இருந்து சென்னைக்கு 103 சதவீதமாகவும் உள்ளதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications