நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் குற்றவிசாரணை தீர்மானம்.. இந்தியா கூட்டணி திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வழக்கில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக அளித்த உத்தரவு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக நீதிபதியை விமர்சிக்கும் அளவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் இறங்கி உள்ளன. இது தவிர, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது இந்திய கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது குற்றவிசாரணை தீர்மானம் அதாவது Impeachment Motion கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மதுரை திருப்பரங்குன்றனத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரண்டுமே திருப்பரங்குன்றம் மலையில் அமைந்தள்ளது. இங்கு சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் , சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 'தீபத்தூண்' அமைந்திருக்கும் இடம், தர்காவுக்குச் சொந்தமான பகுதி அல்ல என்று தீர்ப்பளித்தார். அத்துடன் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு முதல் வழக்கமான இடத்துடன் மட்டுமல்லாமல், தீபத்தூண் அருகிலும் தீபத்தை ஏற்றி, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

thiruparankundram deepam INDIA bloc to move an impeachment motion against HC Justice GR Swaminathan

எதிர்ப்பு ஏன்

ஆனால் இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரிகளும், தமிழக அரசு உத்தரவை நிறைவேற்றத் தயங்கியது.. தயங்கிதை என்பதை விட இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டது. இதனிடையே தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பில் மனுதாரரே தீபம் ஏற்றலாம் என்று , நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் உள்பட திமுக ஆதரவு கட்சிகள் அத்தனையும் ஒரே சேர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தீர்ப்பை அமல்படுத்த முடியாது

இந்த தீர்ப்பை எந்த காரணம் கொண்டும் அமல்படுத்த முடியாது என்பதில் உறுதியாக உள்ளன. அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக கூறியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் எனில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை திமுக கூட்டணி கட்சிகள் நேரடியாக கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளன. அவரை ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளன.

நாடாளுமன்றத்தில் விவாதம்

அத்துடன் அவருக்கு எதிராக நாடாளுமன்றம் வரை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்க தொடங்கி உள்ளன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் அண்மையில் புயலை கிளப்பியது. ஒட்டுமொத்தமாக தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சனையை கிளப்பினார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் அமைச்சகர்களும் கடுமையான பதிலடி தந்தார்கள்.

குற்றவிசாரணை

இந்த சூழலில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது இந்திய கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது குற்றவிசாரணை தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உட்படப் பல தமிழக எம்பிக்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர தீவிரமாக வேலை செய்து வருகிறார்களாம். இந்த தீர்மானம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.

தீர்மானத்தின் நோக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவுகள், ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சட்டத்தைக் கொண்டு கலவரத்தைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள். ஆனால் இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதியைக் குற்றவிசாரணை மூலம் நீக்குவது என்பது இந்தியாவில் மிகவும் கடினமான நடைமுறையாக இருக்கிறது. கிட்டத்தட்ட அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றும் அளவிற்கு எம்பிக்கள் ஆதரவு தேவை.. 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு தேவையாகும். அதாவது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து தான் ஒரு எம்பியை நீக்கவே முடியும்.

எதிர்க்கட்சிகளுக்கு பலம் உள்ளது

ஆனால் மக்களவையில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வரக் குறைந்தது 100 உறுப்பினர்களின் கையெழுத்து அல்லது மாநிலங்களவையில் (Rajya 50 உறுப்பினர்களின் கையெழுத்துத் தேவையாகும். இது எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. இதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் இதற்கு நேரடியாக ஆதரவு அளிக்குமா என்பது கேள்விக்குறித்தான்.

100 எம்பிக்கள் கையெழுத்து

அதேநேரம் 100 எம்பிக்கள் கையெழுத்து போட்டு கொடுத்தாலும் நாடாளுமன்றத்தில் ஏற்கப்படுமா அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்படுமா என்பது அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து தான் இருக்கும். பொதுவாக ஒரு நீதிபதியை நீக்குவதற்கு, நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது திறமையின்மை என்ற காரணங்கள் மட்டுமே அரசியலமைப்பில் அனுமதிக்கப்படுகிறது. ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பானது அவருக்கு எதிராகக் குற்றவிசாரணை கொண்டு வரப் போதுமானதா என்பது சபாநாயகரின் முடிவை பொறுத்து இருக்கும். ஒருவேளை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் விவாதிக்கப்படும். விவாதம்முடிவில் ஓட்டெடுப்பு நடைபெறும். ஆனால் இதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+