திருப்பரங்குன்றம் டூ பராசக்தி வரை.. "ஒன்இந்தியா தமிழ்" Zen Z Talk நிகழ்வில் அனல் பறக்க நடந்த விவாதம்
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம், பராசக்தி சென்சார் என தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்லும் நிலையில், ஒன் இந்தியா தமிழ் நடத்தும் Zen Z Talk நிகழ்விலும் அனல் பறக்க விவாதம் நடைபெற்றது. சட்ட மாணவர்கள் பங்கேற்று விருந்தினர்களிடம் பல்வேறு விஷயங்கள் பற்றியும் காரசார கேள்விகளை எழுப்பினர்.
ஒன் இந்தியா தமிழ் சார்பில் "Zen Z Talk' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து "Zen Z Talk' நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் சட்டம் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதனால் பரபரப்புக்கு கொஞ்சமும் இல்லாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள் என்று பார்த்தால் திமுக சார்பாக வழக்கறிஞர் சரவணன், அதிமுக சார்பாக கோவை சத்யன், காங்கிரஸ் சார்பில் அலிம் அல்புஹாரி, பாஜக சார்பில் ஸ்ரீகாந்த் கருணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழல் நிலவரம் குறித்து இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்கு விருந்தினர்கள் பதிலளித்தனர். பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இன்றி சூடாக நடைபெற்றது. தற்போதைய அரசியல் நிலவரம், சென்சார் பிரச்சினை என பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு காரசாரமான பதில்களையும் விருந்தினர்கள் அளித்தனர்.
களேபரம், பரபரப்பு என நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முழு காணொலியை "ஒன்இந்தியாதமிழ்" யூட்யூப் தளத்தில் ஒளிபரப்பாகிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications