சித்தப்பா பண்ற வேலையா இது? மகள்னு கூட நினைக்கல.. திருவள்ளூர் கோர்ட் நீதிபதி தந்த தீர்ப்பை பாருங்க
சென்னை: உறவு சிக்கல்கள் தொடர்பான வழக்குகள் சமீபகாலமாகவே நீதிமன்றங்களில் பெருகி வருகின்றன.. குறிப்பாக, திருமண முறிவு, ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு போன்ற விஷயங்களில் கோர்ட்டுகள் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், மகள் என்றும் பாராமல் சிறுமியை சீரழித்துள்ள சித்தப்பாவுக்கு திருவள்ளூர் கோர்ட் வழங்கியிருக்கும் தண்டனையானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. என்ன நடந்தது திருவள்ளூர் மாவட்டத்தில்?
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருவள்ளூர் அக்கா கணவர்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி வினோத்.. தனலட்சுமி.. இவரது அக்கா, தன்னுடைய கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்டார்.. இதனால், அக்காவின் 14 வயது பெண் குழந்தையை தனலட்சுமி வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு, மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை 39 வயதான வினோத் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு குடும்பத்தினர் கொந்தளித்தனர்.. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத வினோத், துபாய்க்கு கொத்தனார் வேலைக்கு கிளம்பி சென்று விட்டார். எனினும், தனலட்சுமிக்கு கணவர் செய்த துரோகத்தை ஜீரணிக்க முடியவில்லை.
சிறுமியை சீரழித்த சித்தப்பா
இதனால் கடந்த 2019 அக்டோபர் 29ம் தேதி தனலட்சுமி பட்டாபிராம் மகளிர் போலீசில், தன் அக்கா மகளை கணவர் வினோத் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும, கணவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறியிருந்தார்..
இதையடுத்து, பட்டாபிராம் மகளிர் போலீசாரும், தனலட்சுமி தந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 2021 ஜனவரி மாதம் 26ம் தேதி துபாயிலிருந்து திருச்சி ஏர்போர்ட்டில் வந்திறங்கினார் வினோத்.. ஆனால், முன்கூட்டியே காத்திருந்த பட்டாபிராம் மகளிர் போலீசார், வினோத்தை சுற்றிவளைத்து கைது செய்து ஜெயிலில் அடைத்துவிட்டனர்.
திருவள்ளூர் கோர்ட் நீதிபதி தீர்ப்பு
இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.. திருவள்ளூரில் சிறப்பு போக்சோ கோர்ட் செயல்பட தொடங்கியதையடுத்து, இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, அங்கு விசாரணை நடந்து வந்தது..
இதனிடையே, வினோத் சம்பந்தப்பட்ட சிறுமியை மிரட்டியிருக்கிறார்.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, கடந்த 2021ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.விஜயலட்சுமி ஆஜராகி வாதாடிய நிலையில், இறுதியில், நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
மொத்தம் 35 வருடங்கள் தண்டனை
அதில், "சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுகிறது.
உறவுக்காரன் என்ற முறை
மேலும், உறவுக்காரன் என்ற முறையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் என மொத்தம் 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்..
அத்துடன், சிறுமியின் சித்தி தனலட்சுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு வழங்க வேண்டும்" என்றும் நீதிபதி உமா மகேஸ்வரி பரிந்துரை செய்தார். இதையடுத்து, போலீசார் வினோத்தை புழலில் அடைத்துள்ளனர். மகள் என்றும் பாராமல் பலாத்காரம் செய்த சித்தப்பாவுக்கு 35 வருடம் கிடைத்திருப்பது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications