சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்! 4ஆவது நாளாக சசிகாந்த் செந்தில் எம்பி உண்ணாவிரதம்
சென்னை: மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் 4ஆவது நாளாக அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ 2,152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் ஆக.29 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

திருவள்ளூரில் கடந்த 30ஆம் தேதி அவர் 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தின் போது சசிகாந்த் செந்தில் எம்பிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கும் அவர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையை காரணம் காட்டி, உணவு அருந்துமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்படாமல் இருக்க, அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சசிகாந்த் சிரித்தபடியே மறுத்துவிட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே 4ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications