ஆடையின்றி.. திருவள்ளூர் ஸ்டேஷனில் ஓடிய "அந்த" பொண்ணு யாரு.. உடம்பில் 50 இடத்தில் பிளேடால்.. கொடூரம்
சென்னை: இந்த பரிதாபத்துக்குரிய பெண் யார் என்று தெரியவில்லை.. ஆனால் சீரியஸாக இருக்கிறார்.. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையை தந்துவருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இத்தனைக்கும் தமிழக காவல்துறை விழிப்புணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது.. ஆபரேஷன் கஞ்சா முதல் கள்ளச்சாராயம் வரை ஒவ்வொரு விஷயத்திலும், தீவிர நடவடிக்கையை கையில் எடுத்து வருகிறது. குற்றவாளிகள் தொடர்ந்து கைதாகி கொண்டே இருக்கிறார்கள்.
எனினும், குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார்களை வாசித்து வருகின்றன.. இதோ, நேற்றிரவுகூட ஒரு கொடுமை நடந்துள்ளது.. அதுவும் திருவள்ளூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குள்ளேயே நடந்துள்ளது..

இந்த ரயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.. எந்நேரமும் பயணிகளின் கூட்டம் அலைமோதிக்கொண்டே இருக்கும்.. நைட் 9 மணி அளவில், வழக்கம்போல் பிஸியாகவே இருந்திருக்கிறது இந்த ஸ்டேஷன்.
3வது பிளாட்பாரம்: அப்போது, ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது ப்ளாட்பாரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது.. உடம்பில் டிரஸ் எதுவும் இல்லாமல், ரயில் நிலையம் நோக்கி ஓடிவந்துள்ளார்.. நிர்வாண நிலையிலேயே, குத்துயிரும் குலையுயிருமாக அவர் ஓடிவருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த , ரயில்வே போலீசார், அந்த பெண்ணை பிடித்து, ஆடை அணிவித்துள்ளனர்.. பிறகு, அவரை 108 அவசர ஊர்தி வரவைத்து அதில் ஏற்றி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணை பார்த்ததுமே டாக்டர்கள் மிரண்டு போய்விட்டனர்.. அந்த பெண்ணின் உடம்பெல்லாம் ரத்தத்தால் நிரம்பியிருந்தது.. எங்கே பார்த்தாலும் காயங்கள் இருந்திருக்கின்றன.. கிட்டத்தட்ட 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது... முகம், கை, கால் என அனைத்து இடங்களிலுமே காயங்கள் படுபயங்கரமாக காணப்பட்டது.
அம்பத்தூர்: உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொல்லவும், விசாரணையும் துரிதமாக ஆரம்பமானது.. இவ்வளவு கொடூரமாக வெட்டப்பட்டுள்ள அந்த பெண், அண்ணனூர் பகுதியை சேர்ந்தவராம்.. அம்பத்தூரை சேர்ந்த ஒருவருடன் திருவள்ளூருக்கு வந்ததாக தெரிகிறது...
அதற்கு பிறகுதான், நிர்வாணப்படுத்தப்பட்டு பிளேடால் சரமாரியாக உடல் முழுவதும் கிழிக்கப்பட்டு கிடந்திருக்கிறார்.. ஆனால், அவருடன் வந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. அவர் இப்போது தலைமறைவாகி உள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட காரணம் என்ன? என்பதும் தெரியவில்லை.. அந்த இளைஞரை பிடித்து விசாரித்தால்தான், உண்மை தெரியவரும் என்பதால், தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீரியஸ்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. ஆனால், அந்த பெண் ஆபத்தான நிலைமையில் இருக்கிறாராம்.. டாக்டர்கள் தொடந்து சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால், அவர் இன்னமும் மயக்க நிலையில் இருப்பதால் எந்த ஊர் எந்த பகுதியை சேர்ந்தவர், எதனால் காயம் ஏற்பட்டுள்ளது என்ற காரணத்தை உடனடியாக போலீசாரால் பெற முடியவில்லை..
இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் மங்கை என்கிறார்கள்.. இவருடன் வந்த இளைஞர் அர்ஜூன் என்பதும் தெரியவந்துள்ளது.. யார்? எதற்காக இந்த பெண்ணை வெட்டியுள்ளனர் என்பதும் தெரியவில்லை.. எனவே, பெண்ணுக்கு மயக்கம் நிலையிலிருந்து வெளியே வந்த பின்பு தான் விசாரிக்க முடியும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications