Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலைக்கு போறீங்களா? ரயில் முனையமாக மாறுது "ஸ்டேஷன்".. மத்திய அரசு திட்டத்தால் பக்தர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலைக்கு நாள்தோறும் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுவது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதன் விவரங்கள் என்ன? இதுகுறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?

திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும்.. அதாவது 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்தவகையில், திருவண்ணாமலையின் வயதை 260 கோடி வருடங்கள் என்று மதிப்பிட்டுள்ளனர்.

thiruvannamalai tiruvannamalai train terminal railway

பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்ய திரண்டு வருகிறார்கள்.

தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் அலைக்கடலென திரண்டு திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால், பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாகவும் செலுத்துகிறார்கள்..

அம்ரித் பாரத் திட்டம்

மிக முக்கிய புண்ணியத்தலம் என்பதால், தீபத்திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது.. விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயில்கள் எண்ணற்ற பயணிகளுக்கு மிகுந்த வசதியை தந்திருந்தது..

இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காகவே 7.86 கோடி ரூபாய் செலவில், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..


ரயில் நிலையம் முனையம்

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தவும் பணிகள் நடந்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த நிலையத்தை முனையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். உரிய ஒப்புதலை பெற்று, ரயில்வே முனையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலையம் முனையமாக மாறினால், இங்கிருந்து பிற நகரங்கள், மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்கள்.

பயணிகளுக்கு குஷி

திருவண்ணாமலை ரயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என்று தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. காரணம், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதன் மூலம், ரயில்கள் திருவண்ணாமலையில் இருந்து புறப்படவும், அங்கு வந்து நிற்கவும் முடியும்... மேலும், திருவண்ணாமலையில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்வதற்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+