திருவாரூர் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு.. ஸ்டாலின் அதிரடி
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்று இன்று திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளது.
Recommended Video

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
திருவாரூர் தேர்தலுக்கான திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று மாலை நடந்தது. சென்னை அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடந்தது. நேர்காணல் முடிவில் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீவிர ஆலோசனை
கடந்த 4 நாட்களாக திமுக திருவாரூர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முறைக்கும் மேல் கூட்டம் நடத்தினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்தார்.

மூன்று பேர்
இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட நேற்று பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு
இதையடுத்து விருப்பமனு மீதான பரிசீலனை இன்று நடந்தது. விருப்பமனு தாக்கல் செய்வதர்கள் இன்று நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டனர். உறுப்பினர்களுடன் அதன்பின் ஆலோசனை நடந்தது. நேர்முக தேர்வு சுமார் 1.30 மணி நேரம் நடந்தது.

பூண்டி கலைவாணன் தேர்வு
இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பூண்டி கலைவாணன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக தேர்தலின் போது கடுமையாக பிரச்சாரம் செய்தவர். திமுகவின் திருவாரூர் அடையாளமாக இவர் திகழ்கிறார். இவர் திமுகவின் மிகவும் வலுவான நபராக பார்க்கப்படுகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications