ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார்.. ஓ.பன்னீர்செல்வம் பரபர பேட்டி!
ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் எம்ஜிஆர்- அம்மா - தீபா பேரவை நிறுவனர் ஜெ. தீபா இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வந்தது. இதையடுத்து அடுத்த அதிரடியாக, தற்போது ஜெ. தீபா அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வருகிறது.

ஜெ. தீபா பேட்டி
காலையில் ஜெ. தீபா அளித்த இதுகுறித்து பேட்டியில், திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது பேரவை சார்பாகவும் யாரும் போட்டியிட போவதில்லை. நாங்கள் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவும் அளிக்க போவதில்லை.

அதிமுக விருப்பம்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனி்ச்சாமி தலைமையிலான அதிமுக அணியில் இணைந்து செயல்பட எண்ணம் உள்ளது. அதிமுகவுடன் இணைவது தொடர்பாக தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு இணைவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைவரின் கருத்தும் அதுவாகவே இருக்கும், என்று கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் பதில்
இந்த நிலையில் ஜெ.தீபாவின் கருத்து குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கருத்து தெரிவித்தார். அதில் ஜெ.தீபாவை அதிமுகவில் சேர்க்க தயார். ஜெ.தீபா கட்சியில் இணைய விரும்பினால் சேர்த்துக் கொள்வோம். ஜெ.தீபா உட்பட யார் கட்சியில் இணையம் விருப்பம் தெரிவித்தாலும் சேர்த்துக் கொள்வோம்.

திருவாரூர் வேட்பாளர்
அதிமுகவிற்கு யார் வந்தாலும் இணைத்துக்கொள்வோம். திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பெயர் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் மிகவும் வலுவான வேட்பாளரை களமிறக்க போகிறோம், என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications