நடுரோட்டில் நிறுத்தப்பட்ட சைக்கிள்.. கோபத்தில் ஆட்டோ டிரைவர் செய்த வேலை.. அவருக்கே வந்த வினை
சென்னை: சில வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். சிலர் அதேபோல் ஓரத்தில் இருக்கும் வாகனத்தை இடித்துவிட்டு கண்டு கொள்ளாமல் செல்வார்கள். வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற வாகன ஓட்டி திரும்ப வந்து பார்க்கும் போது டேமேஜ் இருக்கும்.. யார் தள்ளிவிட்டார்கள் என்பது தெரியாது. அவர்களின் செயலால் நொந்து போய் இருப்பார்கள். இந்நிலையில் சாலையில் நிறுத்தப்பட்ட சைக்கிளை தள்ளிவிட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு தரமான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய வீடியோவை பார்ப்போம்.
இந்தியா முழுவதுமே உள்ள பெரிய போக்குவரத்து ஒழுங்கீனம் என்றால், கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வது தான். சென்னையில் எல்லாம் பல சாலைகளில் இதனை காண முடியும். முதலில் பார்க்கிங், அப்புறம் தான் வாகனங்கள் செல்வதற்கு வழி, இதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. அப்படி சாலைகளில் ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது.

டிரைவர்கள் செயல்
அதேநேரம் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை சில டிரைவர்கள் தள்ளிவிட்டு செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளது. சாலையின் ஓரத்தில் இடையூறு இல்லாமல் நிறுத்தும் வாகனத்தை எதுவும் செய்வது இல்லை.. மாறாக சாலையில் இடையூறு செய்யும் வாகனங்களை தள்ளிவிட்டு செல்வது அல்லது சாலையில் ஓரத்தில் தள்ளவிட்டு செல்வது போன்ற காரியங்களை சில டிரைவர்கள் செய்கிறார்கள்..
தள்ளிவிட்டு செல்கிறார்கள்
கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் இப்படிப்பட்ட சிக்கலை அடிக்கடி சந்திப்பது உண்டு. சில சமயம் சைக்கிள் ஓட்டுவோரும் இப்படி வாகன ஓட்டிகளால் பாதிக்கப்படுவது உண்டு. அப்படிதான் சைக்கிள் ஓட்டி செய்த தவறும், அதற்கு எதிர்வினையாற்றிய டிரைவருக்கு சிக்கலாக முடிந்தது.
ஆட்டோ ஓட்டுநர் சைக்கிள்
எந்த ஊர் என்று தெரியவில்லை.. சாலையில் நடுரோட்டில் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. ஆட்டோவில் வந்த ஓட்டுநர், ஆட்டோவை விட்டு இறங்காமல், அப்படியே உள்ளே இருந்தபடியே சைக்கிளை ஓரத்தில் தூக்கி எறிகிறார். ஆனால் அந்த சைக்கிள் நடுரோட்டிலேயே விழுந்துவிடுகிறது. எனினும் சாலையை கடந்துவிடலாம் என்ற நினைப்பில் ஆட்டோ டிரைவர் வாகனத்தை இயக்குகிறார். ஆனால் சைக்கிளின் பின்சக்கரம் ஆட்டோவின் பின்சக்கரத்துடன் சிக்கி கொள்கிறது.
ஆட்டோவை நகர்த்துகிறார்
வேறு வழியில்லாமல் டிரைவர் ஆட்டோவை விட்டு இறங்கி, தனது ஆட்டோ ரிக்ஷாவின் பின் சக்கரத்தில் சிக்கிய சைக்கிளை எடுத்துவிடுகிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டோ முன்னால் நோக்கி நகர்கிறது. அது பள்ளமான சாலை என்பதால், மின்னல் வேகத்தில் ஆட்டோ பள்ளத்தில் போய் பாய்ந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஆட்டோ டிரைவர் வாகனத்தை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார். இப்படியாக வீடியோ முடிகிறது.
சொத்து வீணாகும்
வினை விதைத்தவன் வினையருப்பான் என்றும், அடுத்தவன் சொத்தை சேதப்படுத்தினால், தன்னுடைய சொத்து வீணாகப்போகும் என்றும் நெட்டிசன் ஒருவர் வீடியோவை வெளியிட்டு கூறியுள்ளார். இதற்கு சில நெட்டிசன்கள் எதிர்வினையாற்றவும் செய்திருக்கிறார்கள். சைக்கிளை எதற்காக நடுரோட்டில் நிறுத்த வேண்டும். வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இப்படி பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்தவர் சொத்து தானே pic.twitter.com/3JGTzjZB0X
— அங்குசம் (@saiko58791481) June 9, 2025
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications