சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது அதுல்ல? நாங்கள் அமைத்திருப்பது மக்கள் நலக்கூட்டணி.. ராமதாஸ் சொல்வதை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடன் பாமக அமைத்து இருக்கும் கூட்டணிதான் மக்கள் நலக்கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் இன்று தான் கையெழுத்தானது. அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது.

This is Makkal Nala Kootani says Ramadoss after PMKs deal done with AIADMK

இந்த தேர்தல் கூட்டணி உறுதியான பின் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தலைவர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தின் நலனுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மேலும், நாங்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை பின்னர் அறிவிப்போம். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க 10 கோரிக்கைகளை முதல்வர், துணை முதல்வரிடம் அளித்துள்ளோம்.

தமிழக மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி அமைக்கப்படுகிறது. அதிமுக - பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா கூட்டணியாக அமையும், என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே அதிமுகவிற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து அமைத்த இந்தக்கூட்டணி முழுக்க முழுக்க அதிமுக, திமுகவிற்கு எதிரான கூட்டணி ஆகும்.

ஆனால் தேர்தல் தோல்விக்கு பின் அந்த கூட்டணி காணாமல் போனது. தற்போது இந்த புதிய அதிமுக - பாமக கூட்டணியை ராமதாஸ் மக்கள் நலக்கூட்டணி என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் இதை மெகா கூட்டணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
This is Makkal Nala Kootani says PMK founder Ramadoss after PMK's deal done with AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X