இதுதான் கடைசி ஆசை.. விஜயகாந்த் கடைசியாக வைத்த கோரிக்கை இதுதான்.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் கடைசி ஆசை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.

This is the last wish of DMDK Founder Vijayakanth: Do you know what it is?

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இப்போது மரணத்திற்கு என்ன காரணம்?: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலைக்கு என்ன ஆனது? அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளன.

அதை தொடர்ந்து கொரோனா ஏற்பட்டு உள்ளது. ஆனால் மரணத்தின் பின் அது பாசிட்டிவ் ஆக இல்லை. இதனால் அவரின் மரணத்திற்கு கொரோனா காரணம் என்று கூற முடியாது. மரணத்திற்கு பின் செய்யப்பட்ட சோதனையில் அவர் கொரோனா பாசிட்டிவ் இல்லை.

விஜயகாந்த் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாகவே மரணம் அடைந்து உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் நுரையீரல் அழற்சி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு சுத்தமாக மூச்சு விடும் திறன் இல்லாமல் போய் உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது. இதுவே அவரின் மரணத்திற்கும் காரணம் ஆகி உள்ளது.

உடல் மாற்றம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நேற்று தேமுதிக அலுவலகத்தில் கோயம்பேட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் உடல் வைக்கப்பட்ட இடம் தீவு திடலுக்கு மாற்றப்பட்டது ஏன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது. இட நெருக்கடி காரணமாக தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்தின் உடல் மாற்றப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிற்பகல் 1 மணிக்கு விஜயகாந்தின் ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து புறப்படுகிறது. இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறார் விஜயகாந்த். தீவுத்திடலில் வைக்கப்பட்ட உடல் பிற்பகல் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

நள்ளிரவு முழுக்க தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் கேப்டன் என கதறியவாறும் தலையில் அடித்துக் கொண்டும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். விடிய விடிய தொண்டர்களுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர்.

என்ன ஆசை: நேற்று விஜயகாந்த் உடலை தேமுதிக அலுவலகத்தில் வைக்க காரணம்.. அது விஜயகாந்த் ஆசை என்று கூறப்படுகிறது. அங்கேதான் உடலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார். அதேபோல் அங்குதான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து இருக்கிறார் . இதன் காரணமாகவே அங்கேயே அவரின் உடலை அடக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது அவரின் கடைசி ஆசை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+