பிக்பாஸை விட்டு விலக இதுதான் காரணம்! அமெரிக்கா பறக்கும் கமல்? சூர்யா, சிம்பு எஸ்கேப்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்காக உண்மையான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளார் என்ற முழு விவரம் தற்போது கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். அடுத்ததாக யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பட்டியலில் நயன்தாரா பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது. அவரை சின்ன திரைக்குள் கொண்டு வந்தால் மிகப் பெரிய ஹைப் உருவாகும் என்று விஜய் டிவி நிர்வாகம் கணக்குப் போட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

Kamal Haasan Bigg Boss

நயன் பெயருடன் சேர்த்தே சூர்யாவையும் அழைக்கலாம் என்கிறார்கள். அவர் ஏற்கெனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர். ஆனால், இன்றைக்கு சூர்யாவின் மனநிலை மாறிவிட்டது. அவர் சமூகப் பொறுப்புள்ள விசயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிக் பாஸ் என்பது அவரது அடையாளத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடும் என்று அவர் தரப்பு நினைப்பதாகவும் ஒரு பேச்சு நிலவி வருகிறது. இதனிடையே சரத்குமார் பெயரும் சேர்த்தே முணுமுணுக்கப்படுகிறது. ஆனால், கமல் போல ஒரு நட்சத்திரத்திற்கு அடுத்து சரத்குமார் என்பதைப் பொருத்திப் பார்த்தால் ரசிகர்கள் கொஞ்சம் சோர்வடையலாம் என்றும் விளம்பரதாரர்கள் எண்ணிக்கை குறையலாம் என்றும் நிர்வாகம் அஞ்சுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தச் செய்தி எல்லாம் ஒரு கற்பனையானது என்றும், விஜய் டிவி நிர்வாகம் சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி ஆகிய மூவரிடம் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பேசி இருக்கிறார்கள் என்று தொலைக்காட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இதில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையிலேயே சிம்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அவர் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பட்ஜெட் 150 கோடிக்கு மேல் என்கிறார்கள். எனவே சிம்பு எஸ்கேப் ஆகி இருக்கிறார். சூர்யாவும் மறுத்துவிட்டார் என்றே தெரிகிறது.

இறுதியாகக் கப்பல் விஜய் சேதுபதி பக்கம் கரை ஒதுங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் சேதுபதியும் கிட்டத்தட்ட கமல்ஹாசனைப் போலவே கொஞ்சம் அறிவுப்பூர்வமாகப் பேசக் கூடியவர். எனவே நிர்வாகமும் அதை விரும்புகிறது.

இதற்கு நடுவில் கமல் நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கியதற்குள் சில உள்குத்துகள் உள்ளதாகச் சிலர் பேசத் தொடங்கி உள்ளனர். ஆனால், அப்படி எந்த உள்குத்து இல்லை என்று நிர்வாக தரப்பே மறைமுகமாகச் சொல்கிறது. அப்படி என்றால் இவ்வளவு பெரிய வருமானத்தை ஏன் கமல் இழக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். எப்போதுமே கமல் சின்ன மீனைப் பிடிப்பவர் இல்லை. அவர் பெரிய மீனைப் பிடிப்பவர். அவர் அட்வான்ஸ் ஆக மாறப் போகிறார். சினிமாவில் அடுத்த கட்டத்திற்குப் பாயப் போகிறார். அவர் ஏஐ டெக்னாலஜி பற்றிப் படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறார். 3 மாதங்கள் அமெரிக்கா செல்கிறார்.

ஆகவே அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான நேரம் இல்லை. கூடவே 'கல்கி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. அதை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று படக்குழு கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் காட்சிகளை முடித்துக் கொடுத்த பிறகு அவர் 'தக் லைஃப்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படப்பிடிப்புக்காக அவர் செப்டம்பர் மாதம் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மேற்கொண்டு கமல்ஹாசன் அன்பறிவு இயக்க உள்ள படத்திற்கும் தேதி ஒதுக்க வேண்டி உள்ளது. அதை முடிப்பதற்குள் 2026 தேர்தல் களம் நெருங்கிவிடும். அவருக்குக் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தார். அவரது கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் விரைவில் அவர் எம்பி ஆகலாம். நாடாளுமன்றத்திற்குச் சென்றால் முறைப்படி அனுமதி பெற வேண்டும். டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் சட்டச் சிக்கல் வரலாம். அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

ஆனால், கமல்ஹாசன் தான் பிக்பாஸ் தொகுத்து வழங்குவார் என நிறுவனம் ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். பல கோடிகளில் விளம்பரங்களை வாங்கிவிட்டது. போஸ்டர்கள், விளம்பரங்கள் கூட தாயார் நிலையில் உள்ளன. கமல் இதை திடீர் என்று அறிவித்திருக்கிறார். இந்த நிலைமையை எப்படியாவது கமலுக்குப் புரிய வைக்க டிவி நிர்வாகம் சந்திப்பை நடத்தி உள்ளது. சம்பளத்தை அதிகம் கொடுப்பதாக ஒரு யோசனையை முன்வைத்துள்ளது. கமல்ஹாசனுக்கு ஒரு காலத்தில் பணப் பிரச்சினைகள் இருந்தன. கடன் தொந்தரவு கூட இருந்தது. அது எல்லாம் 'விஸ்வரூபம்' காலத்திலிருந்த நிலைமை. இப்போது அவரது சொத்துகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஆகவே, அவர் சம்பளம் ஒரு பிரச்சினை இல்லை என்றும் தனது அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? தனது நிலைமை என்ன? என்று தெளிவாக விளக்கி இருக்கிறார். இறுதியாக கமல் கதவு சாத்தப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+