"பாக்சிங்கிற்கு இடமும் ரெடி, தேதியும் ரெடி" தயாராக இருக்கிறார் என் கணவர்..சீமானை சீண்டும் வீரலட்சுமி
சென்னை: வீரலட்சுமி கணவருடன் பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன் என்றும் சீமான் தெரிவித்த நிலையில், இடம், தேதியை அறிவித்து வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி நின்றார். அத்துடன் நடிகை விஜயலட்சுமியை பண்ணை வீடு ஒன்றில் தங்க வைத்தார். ஆனால் அந்த பண்ணை வீட்டில் தன்னை அடைத்து வைத்து வீரலட்சுமி சகோதரிகள் சித்ரவதை செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனிடம் போனில் கதறினார் விஜயலட்சுமி.

சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடப்பதாக விஜயலட்சுமி கூறியதால் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக அவர் மீட்கப்பட்டு புகார் வாபஸ் பெறப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்த திருப்பமாக சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. என் வாழ்க்கையில் வீரலட்சுமிக்கு எல்லாம் மன்னிப்பே இல்லை சீமான் காட்டமாக விமர்சித்தார்.
இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்பிழுத்ததாக ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் எந்த கருத்தும் இதுவரை சொல்லப்படவில்லை. அந்த ஆடியோவில், சீமானிடம் பேசும் நபர், அண்ணே! நீங்க நல்லா இருக்கீங்களாண்ணே? என்கிறார். அதற்கு சீமான், ஏங்க நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா? நான் நல்லா இருக்கேனா இல்லையான்னு கேட்டுகிட்டு கடுப்படிக்கிறார்.
ஆனாலும் "அண்ணே நம்ம ரெண்டு பேரும் பாக்சிங் பண்ணலாமா? டவர் ஏறி? ரிங் ஏறி.. ரிங் ஏறி.. உங்க கூட பாக்சிங் பண்ணனும்னு ஆசையா இருக்குண்ணே என்கிறார் போனில் பேசிய நபர். அத்துடன் அண்ணே.. அண்ணே.. என அழைத்தது போதும் நீங்க யாருன்னு சொல்லிட்டு பேசுங்க என்கிறார் சீமான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், வீரலட்சுமியின் கணவர் உங்களை போனில் மிரட்டியதாக சொல்லப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதிலில், அது பேசக் கூடாதுன்னு நீதிபதி சொல்லி இருக்காங்க.. பாக்சிங் அது சரிதான்.. அவரு பகல் நேரத்துல பேசுனா நாம பாக்சிங் போகலாம்..
7 மணிக்கு மேல பேசுறாரு.. அவரு பாக்சிங்கிக்கு கூப்பிடுறாரு.. நான் பேசி அவர் பதிவு பண்றாருன்னு தெரியுது. நாம எதையாவது பேசி அவர் பதிவு பண்ணி இந்த மாதிரி கேள்வி வரும்னுதான் செல்போனை கட் செய்தேன். அவர் எங்க கையாலதான் சாகனும்னு முடிவெடுத்துட்டாருன்னா சந்தோஷமாக எதிர்கொள்கிறேன்.. கேட்டு சொல்லுங்க.. இடம், நேரம் எல்லாம் நீங்க சொல்வீங்களாம்..
எப்ப வேணும்னாலும் அவரு வருவாருன்னு சொல்லிடுங்க நீங்க வாங்க அவரோட சண்டை போட்டு ஜெயிச்சிடுங்கன்னு சொல்லுங்க.. அவர் கிட்ட நேரில் முதலில் ஒருமுறை வந்து நில்லு.. அப்புறம் சண்டை போடலாம்னு சொல்லுங்க.. கேட்கும்போது சிரிப்பா இருக்குல்ல.. மகிழ்ச்சியாக இருங்க.. " என்றார். இந்த நிலையில்,சீமான் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக வீரலட்சுமி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- ஊடகவியலாளர் மத்தியிலும் நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுங்கினமான பேச்சு, பேசிக்கொண்டு இருந்தீர்கள். நீங்க பேசும் பேச்சை எல்லாம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்ணாக தலைவராக நான் வேண்டும் என்றால் இதை கடந்து போய்விடலாம். ஆனால், நீங்கள் என்னை பேசிய பேச்சை கேட்டுவிட்டும் கடந்து போக வேண்டிய அவசியம் என் கணவருக்கு கிடையாது.
அதனால், உங்களை தொடர்பு கொண்டு நான் வீரலட்சுமியின் கணவர் பூவை கணேசன் பேசுகிறேன் என்றதும் நீங்கள் அழைப்பை துண்டித்து விட்டீர்கள். மறுபடியும் உங்களை தொடர்பு கொண்டார். அப்போது உங்கள் கூட பாக்சிங் பண்ண ஆசையாக இருக்கு.. ஒண்டிக்கு ஒண்டி நிற்கலாமா என பேசினார். அதைக் கேட்டுட்டு போனில் பேசுவதற்கு உங்களுக்கு வீரம் இல்லை. ஊடகங்கள் முன்னாடி மைக்கிற்கு முன்னாடிதான் உங்களுக்கு வீரம் வருமா?

போனை கட் பண்ணிட்டு.. ஊடகங்களிடம் முதலில் அவரை எதிரில் வந்து நிற்க சொல்லுங்க என சொன்னீர்கள். 10 வருடத்திற்கு முன்னாடி உங்க எதிரில் வந்து கேள்வி கேட்டது அவர் தான்.. அது உங்களுக்கு நியாபகம் இருக்காது விடுறுங்க.. நான் நிற்கிற இடம் என்னவென்று தெரியுதா.. இங்க தான் என் கணவருடன் பாக்சிங்.. சண்டை போடவேண்டிய கிரவுண்ட் இடம் இது...
இந்த கிரவுண்ட் எங்கேஇருக்கிறது என்றல் திருவள்ளூர் மாவட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம் இது.. இந்த இடத்தில் தான் பாக்சிங் போடுவதற்கான இடத்தை நாங்கள் தீர்மானம் பண்ணியிருக்கிறோம். தேதி எப்போ பார்த்தீங்கள் என்றால் 2024 தை மாதம் காணும்பொங்கல். அன்னைக்குதான் உங்களுக்கும் எனது கணவருக்கும் சண்டை நடக்க போகிறது..
இந்த சண்டையில் பாக்சிங் கராத்தே, மல்யுத்தம், குங்பூ இதில் எந்த சண்டை வேண்டும் என்றாலும் நீங்க போடுங்க... எல்லாவற்றையும் சமாளிக்க தயாராக இருக்கிறார். இந்த சண்டையில் யாரு நாக் அவுட் ஆகி தோற்கீறிங்களோ அவர்கள் தோற்றதை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் என்ன பந்தயம் என்பதை போட்டி நடப்பதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு நான் அறிவிப்பேன். இவ்வாறு வீரலட்சுமி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications