வாழ்க்கையில் இதை ஒருமுறை மட்டும்தான் பார்க்க முடியும்! வேலூர் கொடுக்கும் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்த மாதம் முழுவதும் 4 கோள்களை வானத்தில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதை தவறவிட்டுவிட்டால் மீண்டும் பார்ப்பது சாத்தியமில்லாதது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேலூரில் ஒளி மாசு குறைவாக இருப்பதால் சென்னை மக்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
விண்வெளி அதிசயம் நிறைந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு அதிசயத்தை நம்முன்னே நிகழ்த்தும். அந்த வகையில், இந்த மாதம் வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை நம்மால் வெறும் கண்களில் பார்க்க முடியும்.

இவையெல்லாம் பூமியிலிருந்து சில கோடி கி.மீ தொலைவில் இருக்கின்றன. வெள்ளி கிரகத்தை எடுத்துக்கொண்டால், சூரிய குடும்பத்தில் மிகவும் சூடான கிரகம் இதுதான். என்னதான் சூரியனிலிருந்து 2வதாக இது இருந்தாலும், இந்த கிரகத்திற்கு என அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது.
எனவே உள்ளே வரும் வெப்பத்தை இது தனக்கு அப்படியே பிடித்து வைத்துக்கொள்கிறது. இதனால்தான் மிகவும் சூடான கிரகமாக இது அறியப்படுகிறது.
அடுத்து செவ்வாய் கிரகத்தை எடுத்துக்கொண்டால், ஒரு காலத்தில் அங்கு தண்ணீர் இருந்தாகவும், அதில் உயிர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை ஆய்வு செய்ய நாம் விண்கலனை அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதனையடுத்து வியாழன் கிரகத்தை எடுத்துக்கொண்டால், இதுதான் சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள். முழுக்க முழுக்க வாயுக்களால் ஆன இந்த கிரகமானது, ஒரு தோல்லியடைந்த சூரியன் என்று அழைக்கப்படுகிறது. மட்டுமல்லாது பூமியை தாக்க வாய்ப்பு இருக்கும் விண்கற்களை இந்த கோள் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. எனவே பூமியின் செக்யூரிட்டி கார்டாகவும் இருக்கிறது.
சனி கிரகத்தை பொறுத்தவரை, மிகவும் அழகான கிரகமாக இது இருக்கிறது. இதுவும் வாயு கோள்தான். சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கோளாக இது இருக்கிறது. இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது ஆச்சரியமான ஒன்று. இந்த சம்பவம் இந்த மாதம் முழுவதும் நடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவற்றை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியும். ஒளி மாசு குறைவாக இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் இதை தெளிவாக பார்க்கலாம். சென்னையில் இருந்து பார்த்தாலும் இது தெரியும். ஆனால் தெளிவாக பார்க்க வேண்டும் எனில் வேலூருக்கு வர வேண்டும்.
வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் திருப்பத்தூரில் வைனு பாப்பு விண்நோக்ககம் அமைந்திருந்திருக்கிறது. இங்கு ஒளிமாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து பார்த்தால் 4 கோள்களை தெளிவாக பார்க்க முடியும். குறிப்பாக இன்று வெள்ளியும், சனியும் வழக்கத்தை விட மிகவும் நெருக்கமாக தோன்றும். அதேபோல உங்கள் கண்கள் 30 நிமிடங்களுக்கு இருட்டில் பழகிவிட்டால் உங்களால் இதை சிறப்பா பார்க்க முடியும்.
அதேபோல இம்மாத இறுதியில் உங்களால் யுரேனஸ் மற்றும் நெப்டியுனையும் பார்க்க முடியும். ஆனால் அவை வெறும் கண்களில் தெரியாது. சிறிய தொலை நொக்கி வைத்திருந்தால் அதை பார்க்க முடியும். அனைத்து கோள்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பது வாழ்க்கையில் அரிய வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications