சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பு கொண்ட இந்த வேர்… 3 மாதத்தில் வழுக்கை தலையில் மாற்றம் தருமா?
சென்னை: இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்றுதான் அதிமதுரம்.. "அதி-மதுரம்" என்ற பெயரிலேயே அதன் இனிப்பு சுவை அடங்கியிருக்கிறது.. சர்க்கரை நோயாளிகள் கூட செயற்கை இனிப்புகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் அளவுக்கு இது பாதுகாப்பானது.. இந்த அதிமதுரம் மூலிகை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.
இன்றைய அவசர தொழில் நுட்ப உலகில் பல பேர் சந்திக்கும் சுவாசப் பிரச்சினைகளான நெஞ்சு சளி, இருமல் மற்றும் வறட்டு இருமலுக்கு அதிமதுரம் ஒரு சிறந்த தீர்வாகும்.. குழந்தைகளுக்கு சளி இருந்தால் வெதுவெதுப்பான நீரில் அதிமதுரப் பொடி மற்றும் சிறிது தேன் கலந்து கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
{image-collage-down-1715000252-1-jpg-1774187855310_1774187732422-600x338.jpg tamil.oneindia.com
பெரியவர்கள் இதனை தேநீராகவோ அல்லது நேரடியாக வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம்.. சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் சோம்பு சிறிது எடுத்து கொதிக்க வைத்த நீரில் இந்தப் பொடியைச் சேர்த்து அருந்தலாம்..பெண்களின் ஆரோக்கியத்தில் அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. குறிப்பாக, கருப்பை தொடர்பான நோய்களை குணப்படுத்துவதோடு மலட்டுத்தன்மை நீங்கவும் இது உதவுகிறது.
அதிமதுரம் மற்றும் திராட்சையைச் சம அளவில் பொடி செய்து, மாதவிடாய் தொடங்கிய முதல் 5 நாட்கள் பாலில் கலந்து குடித்து வந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் தாய்மார்கள் இதனைப் பாலில் கலந்து அருந்தும்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தும் மேம்படும்.
மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் கை, கால் குடைச்சலுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்..சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிலும் இதன் பங்கு அளப்பரியது.. அதிமதுரத்தில் உள்ள ஃபிளவனாய்டுகள் கூந்தலின் வேர்க்கால்களை உறுதிப்படுத்துகின்றன.
இளநரை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிமதுரப் பொடியைப் பசும்பாலில் ஊறவைத்துத் தலையில் மசாஜ் செய்து குளித்தால் நரை மறையத் தொடங்கும்.. வழுக்கை விழுந்த இடங்களில் எருமைப்பால் விட்டு அரைத்த அதிமதுர விழுதைத் தடவி வரலாம்.. முடி உதிர்வைத் தடுக்க அதிமதுரம் மற்றும் நெல்லிக்காயைக் கடுகு எண்ணெயுடன் கலந்து ஹேர்பேக் ஆகப் பயன்படுத்தலாம்.. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்..செரிமான மண்டலத்தைப் பாதுகாப்பதில் அதிமதுரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இது வயிற்றுப் புண்களை ஆற்றுவதுடன் மலக்கட்டையும் நீக்குகிறது.. கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தைப் போக்கி மன அமைதி தரவும் இது வல்லது.
அதுமட்டுமல்ல, பார்வைத்திறனை மேம்படுத்தவும், செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அதிமதுரம் பெரிதும் உதவுகிறது.. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட நினைப்பவர்கள் அந்த எண்ணம் தோன்றும் போதெல்லாம் அதிமதுரத்தைச் சுவைக்கலாம்..
மூலிகை மருத்துவத்தில் அதிமதுரம் என்பது நோய்களை தீர்க்கும் அற்புதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. இருப்பினும், இதனைச் சூரணங்களாகவோ அல்லது மருந்தாகவோ நீண்ட காலம் உட்கொள்ளும் போது தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். முறையான பயன்பாடு மட்டுமே முழுமையான பலனைத் தரும்.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால், இதுபோன்ற இயற்கை மூலிகைகளை நம் அன்றாட வாழ்வில் இணைத்துக் கொள்வது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications