திருமாவளவன் 60-வது பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின், சசிகலா, டிடிவி தினகரன், அண்ணாமலை வாழ்த்து
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 60-வது பிறந்த நாளையொடி, முதல்வர் மு.க. ஸ்டாலின், தினகரன், சசிகலா, அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளை, ஒவ்வொரு வருடமும் அக்கட்சித் தொண்டர்கள் எழுச்சிநாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இன்று 60-வது பிறந்த நாள் காணும் தொல். திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், போன்றவை தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மணிவிழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்று, தொல்.திருமாவளவனை வாழ்த்திப் பேசினர்.
இந்நிலையில், 60-வது பிறந்த நாளை கொண்டாடும் தொல்.திருமாவளவனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் அவர்களை நெஞ்சார வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! என்றும் முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் வாழ்த்து
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மணிவிழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அருமை நண்பர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். நல்ல உடல் நலத்துடன் தமிழ்ச் சமூகத்திற்கு இன்னும் பல்லாண்டு காலம் அவர் பணியாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சசிகலா வாழ்த்து செய்தி
சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்கள் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், அவர்களின் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா வாழ்த்தியுள்ளார்.

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , திருமாவளவன் என்பது பெயர்ச்சொல் அல்ல...சனாதனத்திற்கு எதிரான"வினைச் சொல்". சனாதனத்துக்கு எதிரான கருத்தியல் போரை எல்லா தளங்களிலும் சமரசம் இன்றி நடத்தி வரும் அன்புத் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மணிவிழா காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications